தாட்கோ மற்றும் ICT Academy இணைந்து வழங்கும் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகம் (ICT Academy) இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சென்னை மாவட்டத்தில் மென் பொருள், வலைதளம் வடிவமைப்பாளர் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர் பயிற்சியும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மென்பொருள், வலைதளம் வடிவமைப்பாளர், பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர், தரவுப் பகுப்பாய்வாளர், நுண்நிதி நிர்வாகம் மற்றும் காப்பீடு முகவர் பயிற்சியும், மதுரை மாவட்டத்தில் தரவுப் பகுப்பாய்வாளர், மென் பொருள் வடிவமைப்பாளர், நுண்நிதி நிர்வாகம் மற்றும் காப்பீடு முகவர் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

மென்பொருள் சார்ந்த பயிற்சி பெற இளங்கலை பொறியியல் மற்றும் பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். நிதி சார்ந்த பயிற்சிகள் பெற இளங்கலை வணிகவியல் மற்றும் இளங்கலை வணிக நிர்வாகவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி சென்னை, கோயம்புத்துார் மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியினை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை, திருச்சிராப்பள்ளி 620 001 (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.