தமிழக முதல்வரும் புதிய கவர்னரும் – விரிசல் ஆரம்பம் !
தமிழ்நாட்டின் புதிய கவர்னர் முன்பு இருந்த இடத்துல பத்திரிக்கையாளர்களை சந்திக்கவே இல்லை என்கிற பெயர் அவருக்கு இருந்தது, இதையடுத்து தமிழ்நாடு ஆளுநராகப் பதவியேற்ற உடனே பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். அதுல பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு ஷாட்டா பதில் சொல்லிட்டு ஸ்பீடா கிளம்பிட்டாரு.
பிறகு டிஜிபி-யை அழைத்து ஆலோசனை செய்தார். பழைய கவர்னர் மாதிரி தமிழ்நாடு முழுக்க விசிட் போவாரோ என்றக் கேள்வியும் எழுந்தது. இபிஎஸ் ஆட்சியில் கட்சியிலும், ஆட்சியிலும் ஆரம்பத்தில் வலுவான அதிகார தலைமை இல்லை அதனாலேயே அன்றைய கவர்னர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் தமிழ்நாடு முழுக்க விசிட் போனாரு, மேலும் அன்றைக்கு இருந்த தமிழ்நாடு கவர்மெண்டும் அதை கண்டுக்கல, ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்ல, தமிழ்நாடு அரசு கட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வலுவாக இருக்கு. அதனால தற்போதைய கவர்னர் தமிழ்நாட்டுல விசிட் வர வாய்ப்பு ரொம்ப குறைவு தான்.
இப்படியெல்லாம் கவர்னர் மாளிகையை சுற்றிலும் பேச்சு போய்க்கொண்டிருக்க, அதேசமயம் அமலாக்கத் துறையின் தமிழக பயணத்திற்கான தயாரிப்பை கவர்னர் தான் முன்னின்று நடத்த போகிறாரேன மற்றொரு தகவலும் வருது, இது அறிவாலயத்தின் காதுகளிலும் கேட்டு இருக்காம்.
அதே நேரத்துல தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறையில் இருக்கக்கூடிய நன்னடத்தை சிறைவாசிகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் விடுதலை செய்வதாக அறிவித்தார் . இதற்கு இன்று வரை தமிழக ஆளுநர் கையெழுத்து போடவில்லையாம், செப்டம்பர் 15 ஆம் தேதியே அண்ணா பிறந்த நாள் முடிந்த நிலையிலும் இன்றுவரை கையெழுத்து போடாம இருப்பது தலைமைச் செயலகத்துக்கும் ஆளுநர் மாளிகைக்கும் உள்ள கருத்து வேறுபாட்டை அதிகரித்திருக்காம்.