தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம் ! தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூரில் கவிஞர் தமிழ்ஒளியின் நூற்ற்றாண்டு விழா சிறப்பு கருத்தரங்கம் 19.09.2024ஆம் நாள் பல்கலைக்கழக மொழிப்புல அரங்கில் நடைபெற்றது. இவ் விழாவிற்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமை தாங்கினார்.

நிகழ்வில். இலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெ.தேவி வரவேற்புரையாற்றினார். மொழிப்புல முதன்மையர் பேராசிரியர் கவிதா முன்னிலை உரையாற்றினார். கலைப்புல முதன்மையர் மற்றும் தேர்வு நெறியாளர் பேராசிரியர் பெ.இளையாப்பிள்ளை நோக்கவுரை நிகழ்த்தினார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

தமிழ்ஒளி நூற்றாண்டு விழா
தமிழ்ஒளி நூற்றாண்டு விழா

சிறப்பு விருந்தினர்களாக. சிகரம் செந்தில்நாதன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கவிஞர் களப்பிரன், கவிஞர் இரா.தெ.முத்து, கவிஞர் சு.சண்முகசுந்தரம், கவிஞர் நா.வே.அருள், எழுத்தாளர் உமர் பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். விழாவில் உரையாற்றிய துணைவேந்தர் உரையில்,“கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிப்புலத்தில் தமிழ்ஒளியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தமிழ்ஒளிக்குப் பெருமை சேர்த்திருக்கின்றது. தமிழ்ஒளி பாரதிதாசன் மகன் மன்னர்மன்னருக்கு நெருங்கியத் தோழர். அதன் வழியாக பாரதிதாசன் எழுதும் கவிதைகளைப் படியெடுக்கும் பணியைத் தமிழ்ஒளி செய்துவந்துள்ளார். தமிழ்ஒளியின் கவிதைகள் மிகவும் எளிமையாக இருக்கும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பெரியார் விருது பெற்ற  பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்
பெரியார் விருது பெற்ற  பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்

4ஆம் வகுப்பு பிள்ளைகள்கூட எளிதில் படித்து புரிந்துகொள்ளக்கூடிய வகையில்தான் தமிழ்ஒளியின் கவிதைகள் இருக்கும். குழந்தைகளுக்கு முதன்முதலில் கவிதை எழுதியவர் தமிழ்ஒளி. கவிதையில் காவியம் இயற்றுவது மிகவும் சிரமான ஒன்று. தமிழ்ஒளி சிலப்பதிகாரத்தில் கொண்ட ஈடுபாட்டால் அவர் மாதவி காவியம் எழுதினார். அதோடு மட்டுமல்ல, அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை வேதனையை அடிப்படையாகக் கொண்டு வீராயி காவியமும் எழுதியுள்ளார். இதுதான் முதல் தலித் காவியம் என்னும் பெருமையைக் கொண்டது. தமிழ்ஒளியை சாதிய ரீதியில் பார்த்து அவரைச் சின்னசிமிழுக்குள் அடைத்துவிடக்கூடாது. தமிழ்ஒளி வாழ்ந்த 42 ஆண்டுகளில் சிறந்த கவிதைகளை எழுதியுள்ளார்.

பெரியார் சிறப்பு விருது பெற்ற திருச்சி தி.அன்பழகன்,
பெரியார் சிறப்பு விருது பெற்ற திருச்சி தி.அன்பழகன்,

தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகள் இடம்பெறவேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. எல்லா பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் இடம்பெறவேண்டும். கவிஞனுக்கு எப்போதும் மரணம் இல்லை. மனிதர்களுக்குத்தான் மரணம். மரணத்தை வென்று கவிதையாய் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் கவிஞர்கள். அந்த வரிசையில் கவிஞர் தமிழ்ஒளியும் காலத்தை வென்று இலக்கிய உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். இளைய தலைமுறை தமிழ்ஒளியின் கவிதைகளைப் படித்து, தமிழ்ச் சமூகம் முன்னேற கவிதைகளைப் படைக்கவேண்டும். தமிழ்ஒளியின் புகழ் ஓங்கவேண்டும்” என்று கவிஞர் தமிழ்ஒளிக்குப் புகழாரம் சூட்டினார்.

விழாவில் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் துணைவேந்தர் பொன்னாடைகள் போர்த்தி சிறப்பு செய்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செப்.17ஆம் நாள் பெரியார் பிறந்தநாள் விழாவில் பெரியார் சிறப்பு விருது பெற்ற திருச்சி தி.அன்பழகன், தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் கல்விசார அலுவலர், வளனார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் ஆகியோருக்கும் துணைவேந்தர் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.

நிகழ்வின் நிறைவாக தமிழ்ஒளி நூற்றாண்டு விழா கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சீமான் இளையராஜா நன்றி கூறினார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.