துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் -கோவில்பட்டியில் பரபரப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் நாலாட்டின்புதூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார்.  இன்று காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்த போது, பெத்தேல் அருகே வந்த போது அவர் பின்னால் இரு கார்களில் வந்த நபர்கள் இவரை வழிமறித்து இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு காரில் ஏற்ற முயற்சி செய்துள்ளனர். முத்துக்குமார் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார் முடியவில்லை. மர்ம நபர்கள் வலுக்கட்டாயமாக அவரை காரில் திணித்து கடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை சாலையின் மறுபக்கம் பச்சை வேளாக இருசக்கர வாகனத்தில் சென்ற நாலட்டின் புதூர் காவல் உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் , அந்த கார்களை துரத்த தொடங்கியுள்ளனர்.  கோபாலபுரம் விலக்கு – இடைச்செவல்  இடையே ஒரு காரை உதவி ஆய்வாளர் ஒருவரை வழிமறித்து நிறுத்தினார். காரை நிறுத்தியதும் கார் டிரைவர் தப்பியோடியதாக தெரிகிறது. இதையடுத்து உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் காரில் பார்த்து போது நெல்லையைச் சேர்ந்த ஐயப்பன், தூத்துக்குடியை  சேர்ந்த செல்வகுமார் இருவரும் முத்துக்குமாரை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.  அவர்களிடமிருந்து முத்துக்குமாரை உதவி ஆய்வாளர் மீட்டார். மேலும் ஐயப்பன், செல்வகுமார் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், காரில் இருந்த துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

பறிமுதல் செய்யப்பட்ட காரில் பாஜக கட்சி கொடி கட்டப்பட்டுள்ளது. மேலும் அந்தக் காரில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கு வழங்கப்படும் கார் பாஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த கார் பாஸ்சில் ராஜ்ய சபா உறுப்பினர் முகமது அப்துல் (திமுக) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காரில் வாக்கி டாக்கி ஒன்றும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

இதற்கிடையில் கடத்தப்பட்ட முத்துக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் தன்னுடைய பெட்ரோல் பங்க்கினை தற்போது வேறு ஒருவருக்கு விற்பனை செய்து உள்ளதாகவும், அதனால் தன்னிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு தனது உறவினரான தம்பி முறைவரும் கழுகுமலையை  சேர்ந்த  ராமகிருஷ்ணன் என்பவர் தூண்டுதல் பேரில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Apply for Admission

முத்துக்குமார் குற்றம் சாட்டியுள்ள ராமகிருஷ்ணன் அவரது பங்கில் வேலை பார்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இடையே 33 லட்ச ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை ஏற்பட்டு இது தொடர்பாக கழுகுமலை, நாலாட்டின் புதூர்  காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள செல்வகுமார் மற்றும் ஐயப்பன்
                                 கைது செய்யப்பட்டுள்ள செல்வகுமார் மற்றும் ஐயப்பன்

 

போலீசார் பிடித்து வைத்துள்ள ஐயப்பன் மற்றும் செல்வகுமார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை முடிவில் தான் இந்தக் கடத்தலுக்கான உண்மையான நோக்கம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு கார்களில் மொத்தம் ஒன்பது பேர் வந்துள்ளனர். இதில் இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடத்த வந்தவர்களில் ஒருவர் முத்துக்குமார் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை கடத்தப்பட்டாரா ? அல்லது வேற ஏதும் காரணமா என்பது முழு விசாரணைக்கு பின்பு தான் தெரிய வரும். இந்தச் சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பினை  ஏற்படுத்தி உள்ளது.

 

– மணிவண்ணன், தூத்துக்குடி

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.