திருச்சியில் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா !
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா…. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் திருச்சிராப்பள்ளி போர்ட், டைமன் சிட்டி ,திருச்சி சிட்டி ,நெக்ஸ்ட் ஜென்ட், ஆகிய ரோட்டரி சங்கங்கள், திருச்சி ஐ டொனேஷன், திருச்சி தென்றல் ஆகியவை இணைந்து எங்களுக்காக வாழும் உங்களுக்காக என்கிற தலைப்பில் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழாவை நடத்தியது.
ரோட்டரி சங்க ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, ஜமால் முகமது கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினம், ஜோசப் கண் மருத்துவமனை சேர்மன் பிரதீபா, நிர்வாக அதிகாரி சுபா பிரபு ,ரோட்டரி சங்க மாநிலச் செயலாளர் மின்னல் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு சாரா மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.சி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து 25 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறந்த கல்லூரிக்கான விருதை திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்வியியல் கல்லூரி பெற்றது. விழாவில் அனைத்து சங்க நிர்வாகிகள் ஜோசப் கண் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-சந்திரமோகன்