தனிஷ்க் ஜூவல்லரியில் தங்கம் வாங்க தங்கமான நேரம் !
இந்தியாவின் தவிர்க்கவியலாத அடையாளங்களுள் ஒன்றான, டாடா குழுமத்தின் திருச்சி – தனிஷ்க் (Tanishq) ஜூவல்லரியின் சார்பில் அட்டகாசமான நவராத்திரி சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கிறார்கள்.
கடந்த ஓராண்டு காலமாகவே, தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருந்தாலும் தற்போது மெல்ல விலை குறையத் தொடங்கியிருக்கிறது. தங்கத்தின் விலையை பொருத்தமட்டில், சற்றே விலை குறைந்தாலும் மீண்டும் மெல்ல உயரும் உத்தரவாதமான முதலீடாகவே பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் தருணத்தில் நவராத்திரி விழாக்கால சலுகையாக
* தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ. 301 தள்ளுபடி.
* நகைகளின் செய்கூலி (Making Charges)-யில் 20% வரை தள்ளுபடி.
* பழைய தங்கத்தை மாற்றி புதிய நகைகள் வாங்கும் போது கூடுதல் மதிப்பீடாக 1 கேரட் (1 Karat) கூடுதல் பலன்.
என திருச்சி – தனிஷ்க் (Tanishq) ஜூவல்லரியின் அதிரடி சலுகைகள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இச்சலுகை தொடக்க விழாவில், பிசினஸ் அசோசியேட் கண்ணாத்தாள் அண்ணாமலை, தனிஷ்க் மண்டல வணிக மேலாளர் (Area Business Manager) ரதீஷ் மற்றும் கிளையின் நிர்வாகக் குழுவினர் முன்னிலையில் முதல் விற்பனையாக வாடிக்கையாளருக்கு நகைகளை வழங்கிச் சலுகைகளைத் தொடங்கி வைத்தனர்.
காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என நாளும் ஏற்ற இறக்கங்களை கண்டு வரும் நிலையில், தீபாவளி வரை காத்திருக்காமல் நவராத்திரி சலுகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி – தனிஷ்க் (Tanishq) ஜூவல்லரி நிர்வாகத்தின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.