மகனை எச்சரித்த தயாரிப்பாளர் அப்பா!
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து & மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘ஹைக்கூ’. வரும் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அமைச்சர் ராஜ்மோகன்,
தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, தனஞ்செயன், டைரக்டர்கள் சசி, பொன்ராம் ஆகியோர் படக்குழுவினரை வாழ்த்திப் பேசினர்.
ஹீரோயின்கள் ஃபெமினா, ஸ்ரீதேவி, மியூசிக் டைரக்டர் சித்து குமார் ஆகியோர் சுருக்கமாக பேசினார்கள்.
இயக்குநர் யுவராஜ்,
“பெரிதாக எந்த கண்டிஷனும் சொல்லாத தயாரிப்பாளர் அருள் சார். என்னை நம்பி நான் சொன்னதை எல்லாம் செய்த ஏகன், ஃபெமினா, ஸ்ரீதேவிக்கு நன்றி”.
தயாரிப்பாளர் அருளானந்து,
“விஷன் சினிமா ஹவுஸின் மூன்றாவது படம் இது. சினிமாவில் தெரிவதற்காக 18 வருட உழைப்பை கொடுத்திருக்கிறார் ஏகன். நன்றாக நடித்தால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும் என ஏகனிடம் சொல்லியிருக்கேன். என்னிடம் சொன்னதை அப்படியே யுவராஜ் எடுத்திருக்கிறார்”.
ஹீரோ ஏகன்,
“எனக்கு ஆதரவாக இருக்கும் அப்பாவுக்கு நன்றி. ஆனால் நான் தான் அவருக்கு கால்ஷீட் கொடுத்து தயாரிப்பாளராக்கியதால் அவர் தான் எனக்கு நன்றி சொல்லணும் “.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.