கக்கூசே பரவாயில்லை போல … தேனியில் இயங்கும் டாஸ்மாக் பார்களின் அவலம் !
தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் பார்களில் ஆய்வுவை மேற்கொண்ட மருத்துவம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அனுமதியின்றி பல பார்கள் இயங்கி வருவதையும் அவற்றுள் பல சுகாதாரம், சுத்தம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் இயங்கி வருவதையும் கண்டறிந்திருக்கிறார்கள். சுமார் 40 கேள்விகள் அடங்கிய படிவத்துடன் கள ஆய்வில் இறங்கிய அதிகாரிகளின் கள ஆய்வில் இவை வெளியாகியிருக்கின்றன.
குறிப்பாக, மாவட்டத்தில் இயங்கிவரும் 82 அரசு மதுபான பார்களில் 32 பார்கள் உரிய அனுமதி இன்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், எஞ்சிய 50 பார்கள் உரிய அனுமதியை பெற்றிருந்த போதிலும், சுத்தம் இன்றியும், சுகாதாரம் இன்றியும் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, தமிழக அரசின் உரிய அரசு அனுமதி பெற்றும் சுத்தம் சுகாதாரம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றியும் செயல்பட வேண்டும் என மருத்துவம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தபட்ட பார்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
— ஜெய்ஸ்ரீராம்.