மூத்த எழுத்தாளர் சுகுமாரன் அவர்களின் நேர்காணல்
(1) தங்களைப்பற்றியும் குடும்பம் குறித்தும்
20.4.1950 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சங்கரன் கோவிலில் பிறந்தவர். தந்தை செல்வ துறை, தாயார் கமலா. வரலாற்றுப் பாடத்தில் முதுகலையும், கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றவன். தொடக்கப் பள்ளி ஆசிரியராக 30 ஆண்டுகள் பணி புரிந்தவர். அவரது மனைவி அகிலாவும் ஓர் ஆசிரியை. இரண்டு மகள்கள் ஐ.டி. துறையில் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர். நான்கு பேரக் குழந்தைகள் உள்ளனர்.
(2) தங்களின் இலக்கிய பங்களிப்பு குறித்தும் சிறார் இலக்கிய பங்களிப்பு குறித்தும்.
இதுவரை 80 நூல்கள் எழுதி வெளி வந்துள்ளன. அவற்றில் 11 நூல்கள் பெரியோர்களுக்கானவை. 69 நூல்கள் சிறார் இலக்கியம் சார்ந்தவை. அவற்றுள் 36 நூல்கள் மொழிபெயர்ப்பாகும். என்னுடைய முதல் சிறுகதை ‘ஒரு பிறப்பின் போது ஒரு இறப்பு’ 1974-ம் ஆண்டு தாமரை இதழில் வந்தது. என்னுடைய முதல் சிறார்களுக்கான சிறுகதை ‘விபத்து தந்த பரிசு’ தினமணி இளந்தளிர் பகுதியில் 1992-ஆம் ஆண்டு வந்தது. என்னுடைய சிறார் இலக்கியத்திற்கு அங்கீகாரமாக ‘பபாசி’ வழங்கிய அழ. வள்ளியப்பா விருதைக் கருதுகிறேன். என்னுடைய மொழி பெயர்ப்பு பணிகளுக்கு அங்கீகாரமாக தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதைக் கருதுகிறேன். பெரியோர் இலக்கியத்தில் சிறுகதைகளும், குறுநாவல்களும் பல பரிசுகளைப் பெற்றுள்ளன.
(3) சிறார் இலக்கியத்தை தேர்வு செய்ததற்கான காரணம் :
முதலில் புதுக் கவிதைகளும் பிறகு சிறுகதைகளும் எழுதினேன். 1974-ல் முதல் சிறுகதை வந்தது. சிறுவர்களுக்கான கதை 1992-ல் தான் வந்தது. 18 ஆண்டுகள் கழித்துதான் நான் சிறார் இலக்கியத்திற்கு வந்திருக்கிறேன். முதல் காரணம் நான் ஆசிரியராக இருந்தது. நான் குழந்தைகளை நேசிக்கிறேன். அதனால் சிறார்களுக்காக எழுதுகிறேன். அவர்களுக்கு கதை சொல்ல வேண்டும் என்ற விருப்பம் இன்றும் குறையவில்லை.

(4) சிறுவர் இலக்கியப் பங்களிப்பு – படைப்புகள் குறித்து:
என்னுடைய சிறுவர் இலக்கியப் பங்களிப்பு பன்முகத் தன்மை கொண்டது. சிறுகதை, நவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, கட்டுரை, பாடல், தொகுப்பு, மொழிபெயர்ப்பு என பல பிரிவுகளிலும் பங்களிப்பு செய்திருக்கிறேன்.
நூற்றுக்கணக்கான சிறுகதைகள் 7 நூல்களாக வந்துள்ளன. நூற்றுக்கணக்கான நாடோடிக் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.
நான்கு நூல்களும் எட்டு நாடக நூல்களும் வந்துள்ளன. ஐந்து வாழ்க்கை வரலாறுகளும் இரண்டு கட்டுரை நூல்களும் வந்துள்ளன.
“தங்கச்சிப் பாப்பா” என்று நெடுமையான பாடல் நூல் மட்டும் வந்துள்ளது. பாடல்கள் நிறைய எழுத முடியவில்லை என்ற மன குறை உண்டு. அறிவியல் நூல்களும் அதிகம் எழுதவில்லை.
5)சிறுவர் இலக்கியத்தின் திருப்பு முனை:
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை வாய்மொழியாக இருந்த தமிழ்ச் சிறுவர் இலக்கியம் அச்சு வடிவம் பெற்றது முக்கிய திருப்பு முனையாகும். அச்சு ஊடகத்திலிருந்து இன்று மின்னணு ஊடகத்தில் சிறுவர் இலக்கியம் உலா வருவது இன்றியமையாத திருப்பு முனையாகும்.
6) சிறுவர் இலக்கியத்தின் கதைகள் எந்தெந்த பொருண்மையில் இருக்க வேண்டும்?
ஒட்டுமொத்தமாக நாம் சிறுவர் இலக்கியம் என்று கூறிவிடும் போது வயது அடிப்படையிலான பிரிவுகள் முக்கியம் என நான் நினைக்கிறேன். மழலையருக்கு (3 to 7) பாடல்கள் முக்கியம், சிறுவர்க்கு (8 to 12) கதைகள் முக்கியம், இளையோருக்கு (13 to 16) கதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, நாடகம் முக்கியம்.
* இந்தப் பிரிவுகளின் அடிப்படையிலேயே பொருண்மைகள் (content) அமையும். சிறுவர்களுக்கான பெரும்பாலும் வருவது கட்டுக்கதைகள் (fables),சாகசக் கதைகள் ஆகும். இக்கதைகளில் சமூக அறமைகள் இடம் பெறுவது அவசியம். நாடோடிக் கதைகள் வேடிக்கையாக இருந்தாலும் அது சிறுவர்களுக்கு நன்மையை தான் பேசுகிறது. (Folk tales are fun, but they aren’t just for fun. They teach a lesson or a moral).
7) கடந்த காலத் தமிழ்ச் சிறுவர் இலக்கியத்திற்கும் , தற்காலச் சிறுவர் இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடாக தாங்கள் கருதுவது?
கடந்த காலத் தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தின் காலமாக 1900 முதல் 2000 வரை கொள்ளப்படலாம். 1901-ல் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல்கள் வந்தன. அடுத்து கானகப் பாரதியும் அழ. வள்ளியப்பாவும் வழிகாட்டிகளாக அமைந்தனர். அடுத்து வாண்டு மாமா, பெ. தூரன், பூவண்ணன், ஹையத்தி, தம்பி சீனிவாசன், ரேவதி, தொ. மு. கோதண்டம், வை. கோவிந்தன், பாரதிதாசன், ஆர். வி ஆகியோர் பூவும் காயும் கனியுமாக தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தை செழித்து வளர்த்தனர்.
தற்காலச் சிறுவர் இலக்கியம் பல சவால்களை சந்தித்து வருகிறது. கடந்த காலத்தில் 80 சிறுவர் இதழ்கள் வந்தன. இன்று ஒளிவிட்ட எண்ணிக்கையில் கூட இல்லை. கடந்த காலத்தில் 300 சிறுவர் எழுத்தாளர்கள் படைத்தனர், இன்று ஒளிர்த்து எழுதுபவர்களுக்காக 50 பேர் கூட இல்லை. கடந்த காலத்தில் சிறுவர்கள் இதழ்கள், நூல்கள் வாங்கிப் படித்தனர்.
அவர்களின் உடல் நலமும் மன நலமும் முக்கியம். மனவளத்தைக் காக்க சிறுவர் இலக்கியம் அவசியமாகிறது. தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தின் பல சவால்களை சமூகமே சேர்ந்து தான் சரி செய்ய முடியும். அச் சமூகம் என்பதில் பெற்றோர், ஆசிரியர், நூலகம், குழந்தைகள் நல செயலூக்கி, பாட்டன்மார் அடங்குவர்.
தமிழ்வழிக் கல்வியின் முக்கியத்துவமும், பாதுகாப்பும், நூலகத்தை குழந்தைகளுக்கு உரியதாக ஆக்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கு இதழ்கள், நூல்கள் வாங்கி கொடுக்க வேண்டும். ஆசிரியரும் நூலகரும் நல்ல நூல்களை அறிமுகப்படுத்த வேண்டும், சமூகம் தன் கடமையைச் செய்ய வேண்டும்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.