அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மக்கள் தந்த அதிகாரமே அவர்களுக்கு உதவத் தானே !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் பரப்புரை செய்வதற்காக திருச்சிக்கு வந்த போது கொட்டப்பட்டு என்ற இடத்தில் இருக்கும் அருள்மிகு பச்சநாச்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார்.பயபக்தியுடன் அம்மனை வேண்டிக் கொண்டார். அம்மன் சந்நிதியில் நெடுஞ்சான்கிடையாக விழுந்தும் வணங்கினார். அப்போது எடுக்கப்பட்ட படம் தான் இது.விஜய் வந்த போது ஊடகங்கள் நெருக்கித் தள்ளி,முண்டியடித்துப் படங்களை எடுத்தன.

படத்தில் தரையில் விழுந்து வணங்குவது விஜய் தான். சரி…அதனால் என்ன….? பதிவு விஜய் பற்றியல்ல…கோவிலைப் பற்றியது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

திருச்சி விமான நிலையத்தை தரம் உயர்த்தும் பொருட்டும்,பெரிய ரக விமானங்கள் இலகுவாக வந்து செல்வதற்காகவும்,திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை நீளத்தை 12500 அடிகள் நீட்டிப்பது என முடிவு செய்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. அந்தப் பணியில் அருள்மிகு பச்சநாச்சி அம்மன் கோவில் இருக்கும் இடமும் சிக்கிக் கொண்டது.

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

விமான நிலைய ஓடுபாதை நீட்டிக்கப்பட இந்த கோவில் இடிக்கப்படும் சூழல் உருவானது. அந்தப் பகுதி மக்களின் உணர்வோடு கலந்து விட்ட இந்த கோவிலை,விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக ஏதேனும் செய்து விடுவார்களோ என்ற அச்சம், அந்த கோவிலில் வழிபடும் 18 கிராம மக்களைத் தொற்றிக் கொண்டது. இதை எப்படியாவது தடுக்க வேண்டுமே, யாரிடம் செல்வது? எவரிடம் சொல்வது… என தவித்தனர்.

யாவரும் கேளீர்

இறுதியில் ஒருவரிடம் சென்று முறையிடலாம் என ஒருசேர முடிவும் செய்தனர்.”விமான நிலைய விரிவாக்கம் தேவைதான். ஆனால் அதற்காக இந்த கோவிலின் ஒரு செங்கல் கூட பாதிக்கப்படாது.தைரியமாக இருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்று அந்த கோவிலுக்கு நேரடியாக வந்து, அந்த கோவில் வாசலில் வைத்து 18 கிராம மக்களிடம் உறுதி தந்தார். சொல்லில் தந்த உறுதியை செயலிலும் காட்டினார். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசினார். விமான நிலைய இயக்குநரிடம் நேரில் சந்தித்துப் பேசினார். விளைவு, கொட்டப்பட்டு கிராமத்தில் இருக்கும் அருள்மிகு பச்சநாச்சி அம்மன் கோயில் தப்பியது. மக்கள் நிம்மதியடைந்தனர்.

எந்த ஊடகத்திலும் பெரிதாக இந்த செய்தி வரவில்லை. அதைப் பற்றி அந்த ஒருவரும் கவலைப்படவில்லை.”மக்கள் தந்த இந்த அதிகாரமே அவர்களுக்கு உதவத் தானே…” என்று தன் கடமையைச் செய்த அந்த ஒருவர் தான் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் துரை வைகோ.

– வெங்கடேஷன் சம்பத்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.