துறையூர் பாலக்கரையில் இடிக்கப்பட்ட பொதுக் கழிப்பறை, பயணிகள் பொதுமக்கள் அவதி.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில்அமைந்துள்ளது பொது கழிப்பறை கட்டிடம். இதை பொதுமக்கள் மட்டுமின்றி பயணிகள் பாலக்கரை பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில் கழிப்பறை கட்டிடம் பழுதானதால் இடிக்கப்பட்டு புதிதாக கட்ட நகராட்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இடித்த வேகத்தில் கட்டுமான பணிகள் கடந்த 5 மாத காலமாக நடைபெறவில்லை. இதனால் வயது முதிர்ந்தவர்கள் இடிக்கப்பட்ட பகுதியில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ள பகுதியில் சிறுநீர் கழிக்க சென்று தடுமாறி கட்டிடப்பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகளில் விழக்கூடிய அவலநிலை . ஆண்கள் இந்த நிலை என்றால் பேருந்துக்காக நிற்கும் பெண்கள் தங்கள் இயற்கை உபாதை காரணமாக பெரும் அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இடிக்கப்பட்ட பொதுக் கழிப்பறை
இடிக்கப்பட்ட பொதுக் கழிப்பறை

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

மேலும் பல்வேறு தரப்பினர் பயன்படுத்தக்கூடிய பொது கழிப்பறையை விரைந்து கட்டி முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.இதே போல் சாமிநாதன் நகர் மற்றும் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பயன்பாட்டில் இருந்து வந்த பொதுக் கழிப்பறைகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படாமல் இருப்பதால் துறையூருக்கு தினந்தோறும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும் குறிப்பாக பண்டிகை காலங்களிலும் வந்து செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதி காலம் தாழ்த்தாமல்  கழிப்பறைகளை உடனடியாக கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என துறையூர் நகராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.