அதை எடுத்து எனது வாயில் வைத்து… நெஞ்சை உலுக்கும் உச்சக்கட்ட கொடூரம் ! திருச்சி வந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

0

அதை எடுத்து எனது வாயில் வைத்து… நெஞ்சை உலுக்கும் உச்சக்கட்ட கொடூரம் ! இளைஞனுக்கு நேர்ந்த கதி !

அந்த கொடூர... சம்பவங்கள்
அந்த கொடூர… சம்பவங்கள்

அதை எடுத்து எனது வாயில் வைத்து …  நீ கீழ் ஜாதிகாரன் தானே ___துக்கு என்ன வலிக்குதாடா? நெஞ்சை உலுக்கும் உச்சக்கட்ட கொடூரம் !

https://businesstrichy.com/the-royal-mahal/

”எங்கள் ஒவ்வொருவரையும் நீ _ வேண்டும் இல்லை என்றால் உன்னை உயிரோடு இங்கு கொளுத்திவிடுவோம் என்று மிரட்டி எனது சட்டை, பேண்ட், ஜட்டி ஆகியவற்றை கழட்டி நிர்வாணமாக நிற்க வைத்து எனது _ பிடித்து கையில் இழுத்து இதை அறுத்துவிடுவோம் … ” என்றார்கள்.

”வசந்த் அவரது _ எடுத்து எனது வாயில் வைத்து _ சொன்னான். அதேபோல மற்ற நால்வரும் அவர்கள் _ எனது வாயில் வைத்து _ சொன்னார்கள்… ”

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

”நீ என்ன ஜாதி எந்த ஊர்காரன் என்று கேட்டார்கள் நான் தென்காசியை சேர்ந்தவன் என்றும் நான் இந்து அருந்ததியர் ஜாதியை சேர்ந்தவன் என்றும் சொன்னதற்கு நீ கீழ் ஜாதிகாரன் தானே _ என்ன வலிக்குதாடா என்று என் ஜாதி பெயரை சொல்லி … “

நினைத்தேப் பார்க்கவியலாத அளவிற்கு நம்மையெல்லாம் ஒரு கணம் நிலைகுலைய வைக்கும் இந்த வாக்குமூலம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடையது.

தென்காசி – சங்கரன்கோவிலையடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் காளிராஜ். இளங்கலை பயின்ற 24 வயதேயான அந்த இளைஞர் நண்பர்களுடன் திருச்சியில் தங்கி வேலை தேடி வந்திருக்கிறார். அவரது நண்பரின் சகோதரர் ஒருவர் சாலை விபத்தில் காயமுற்று திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் இருங்களூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

பின்னர், அன்று இரவு (டிச-14) பத்து மணியளவில் திருச்சி செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார். அப்போது, அங்கே நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அக்கறையாக எங்கே செல்ல வேண்டும் என உதவி செய்வதைப் போலவே பேசி நானும் திருச்சிதான் செல்கிறேன் வாருங்கள் என கூறியிருக்கிறார்.

மனிதாபிமான அடிப்படையிலான உதவி என்பதாக நம்பி காளிராஜும் அந்த வண்டியில் ஏறிய நிலையில், இருங்களூரையடுத்த குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்குள் வண்டியை செலுத்தியிருக்கிறார், அந்த நபர். சந்தேகப்பட்டு கேட்டதற்கு, வீட்டிற்கு சென்றுவிட்டு உடன் திரும்பிவிடலாம் என்பதாக கூறியிருக்கிறார்.

அந்தக் குடிமைமாற்று வாரிய குடியிருப்பின் 5-ஆம் எண் வீட்டிற்குள் நுழையவிட்டு கூடவே கதவை சாத்திய அந்த நபர், அங்கேயிருந்த தனது நண்பர்களிடம் காளிராஜை ஒப்படைத்துவிட்டார்.

காளிராஜை வாகனத்தில் ஏற்றி வந்த நபர் உள்ளிட்டு ஆக மொத்தம் 5 பேருமாக சேர்ந்து, காளிராஜை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வக்கிரத்தை அடுத்தடுத்து அரங்கேற்றியுள்ளனர்.

குடிபோதையிலும், கஞ்சா போதையிலும் இருந்த அந்த 5 பேரும், காளிராஜை நிர்வாணப்படுத்தி இயற்கைக்கு மாறான முறையில் ஒருவர் மாற்றி ஒருவராக வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியிருக்கின்றனர்.

இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்
இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

”டேய் வரவே மாட்டேன்டா… எவ்ளோ மூச்சைப் போட்டேன் தெரியுமா? என் பிகருகிட்டகூட இவ்ளோ மூச்சப் போட்டது இல்லைடா … இவனைப் பார்த்தா மேட்டர் மாதிரி தெரியுது, உனக்கு எய்ட்ஸ் இருக்காடா?, எங்களுக்கும் எய்ட்ஸ் வந்துராதுல்ல..“ என்றெல்லாம் அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளால் பேசி தொடர்ந்து சித்திரவதைக் குள்ளாக்கியிருக்கின்றனர். ”அண்ணா வலிக்குதுன்னா… அண்ணா வலிக்குதுன்னா… வலி தாங்க முடியலைன்னா… என்னை விட்ருங்கன்னா… ப்ளீஸ்…” என ஆயிரம் முறையாவது கதறியிருப்பார் காளிராஜ்.

கஞ்சா போதை தலைக்கேறிய கும்பலோ, காளிராஜின் கதறலை கண்டு கலங்கி நிற்கவில்லை. மாறாக, இவனோட அலறல் வெளிய கேட்கப் போகுது. பாட்ட சவுண்டா வையிடானு சொல்லிட்டு காளிராஜ் மயங்கி விழும் அளவிற்கு அடுத்தடுத்து வன்கொடுமைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். இதையெல்லாம்விட உச்சகட்டமாக, இந்த வக்கிரங்களையெல்லாம் வீடியோ எடுத்து ரசித்திருக்கிறது அந்தக் கும்பல்.

மேலும், “முட்டிப்போடுறா… _ டேய் முட்டி போடுடா… _ சரிக்கு சமமா நின்னு பேசுற _ ”னு காளிராஜை சாதி ரீதியிலும் இழிவுபடுத்தியிருக்கின்றனர்.

அப்போதும் விடாமல், ”உனக்கெல்லாம் எதுக்குடா மீசை என்று கூறி பிளேடால் எனது மீசையை ஒரு பக்கம் எடுத்துவிட்டார். நான் அசிங்கமாக இருக்கு என கெஞ்சியதும் பின்னர் முழுவதுமாக எனது மீசையை மழித்து…” விட்டார்கள் என போலீசிடம் வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார் காளிராஜ்.

முதல்நாள் இரவு 10 முதலாக மறுநாள் அதிகாலை 2 மணி வரையில் நான்கு மணி நேரமாக நீடித்திருக்கிறது இந்த சித்திரவதை. நடந்ததை வெளியில் சொன்னால் உயிர் இருக்காது என்று மிரட்டி மெயின் ரோட்டில் இறக்கி விட்டு சென்றிருக்கின்றனர். செய்வதறியாது திகைத்த காளிராஜ், அருகில் இருந்த டீக்கடை காரரிடம் உதவியை நாடி அவசர உதவி எண் 100 ஐ அழைத்து நடந்ததை புகாராக தெரிவித்திருக்கிறார்.

சம்பவத்தையடுத்து, விசாரணையை மேற்கொண்ட சமயபுரம் போலீசார், காளிராஜை உடல்ரீதியாகவும், சாதிரீதியாகவும் கொடுஞ்சித்திரவதைகளை செய்த அந்த 5 இளைஞர்களையும் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.

துவாக்குடி அண்ணா வளைவைச் சேர்ந்த ஜா.ரவி போஸ்கோ; திருவெறும்பூர் கும்பக்குடியைச் சேர்ந்த கு. வசந்த் (எ) கும்பக்குடி வசந்த்; மேல கொண்டையம் பேட்டையைச் சேர்ந்த ம. கவியரசன்; திருவாணைக்கோவிலைச் சேர்ந்த வெ.அய்யனார்; மேல கொண்டையம் பேட்டையைச் சேர்ந்த ரா.யுவராஜ் (எ) பூனை ஆகிய ஐந்துபேரும் வழிப்பறி, செயின்பறிப்பு, வீட்டை உடைத்து திருடுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றப்பின்னணியைக் கொண்டவர்கள் என்கிறார்கள் போலீசு வட்டாரத்தில்.

அந்த கொடூரர்கள்...
அந்த கொடூரர்கள்…

ஐந்துபேரும், துவாக்குடி, திருவெறும்பூர் என வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காகவே, இடம்மாறி வந்து கும்பலாகத் தங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இருங்களூர் கைகாட்டியிலிருந்து எஸ்.ஆர்.எம். மருத்துவமணை வரையிலான இருள்சூழ்ந்த ஆளரவமற்ற பகுதியில் பகுதியில் பதுங்கியிருந்து நள்ளிரவு நேரங்களில் வாகனங்களை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி பணம் நகைகளை பறிப்பதை வாடிக்கையாக கொண்டவர்கள் என்கிறார்கள்.

குறிப்பாக, அண்ணாவளைவைச் சேர்ந்த 28 வயதேயான ரவி போஸ்கோ, சரித்திர பதிவேட்டு குற்றவாளி என்கிறார்கள். இவன் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஓரிசாவுக்கு வேலைக்கு சென்றவன், அங்கிருந்து அவ்வப்போது ஊர் திரும்பும்பொதெல்லாம் இதுபோல நண்பர்களை வரவழைத்து தங்கி குற்றச்செயல்களில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டவன் என்கிறார்கள்.

ரவி போஸ்கோவை தவிர்த்த மற்ற நால்வரும் 19 முதல் 24 வரையிலான வயதையுடைய இளம் குற்றவாளிகள். பட்டியலின சாதியைச் சேர்ந்த கும்பக்குடி வசந்த்தை தவிர்த்த மற்றவர்கள் வன்னியர், முத்துராஜா, நாயுடு ஆகிய சாதியைச் சேர்ந்தவர்கள்.

சாதி கடந்து கஞ்சாவிலும் ரவுடியிசத்திலும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அதேசமயம், காளிராஜை சாதிரீதியிலும் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். ”ஊருவிட்டு ஊரு வந்து காதல் பன்னும்” வயதில், பட்டாக்கத்தியோடும் கஞ்சா போதையோடும் வழிப்பறி, திருட்டு, மிரட்டல் உருட்டு என ரவுடியிசத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

சமூகத்துக்கு அச்சுறுத்தலான இந்த போக்கு, முளையிலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. இது, போலீசுக்கு மட்டுமேயான கடமை மாத்திரமல்ல; குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பெற்றோர்களது அவர்களது குடும்பத்தினரின் கடமையும் கூட!

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.