100 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராத ஏரி… துர்நாற்றத்தால் அவதிப்படும் பொதுமக்கள் ..! இது ஏரியா? இல்லை சாக்கடையா..?
100 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராத ஏரி… துர்நாற்றத்தால் அவதிப்படும் பொதுமக்கள் ..! இது ஏரியா? இல்லை சாக்கடையா..?
திருச்சி மாவட்டம் துறையூரில் அண்ணா பேருந்து நிலையம் எதிரே உள்ளது சின்ன ஏரி. இந்த ஏரி மிகவும் பழமை வாய்ந்த ஏரியா ஆகும். இந்த ஏரிக்கு பச்சை மலையில் அதிக அளவு மழை பெய்தால் மழை நீரானது பச்சை மலையில் இருந்து செங்காட்டுப்பட்டி வழியாக வெளியேறி பெரிய ஏரி நிரம்பி வரத்து வாய்க்கால் வழியாக மீண்டும் சின்ன ஏரிக்கு நீர் வரும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை அதிக அளவு மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பி உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஏரியில் தண்ணீரில் அடித்து வரப்பட்ட மீன்கள் அதிக அளவு வளர்ந்து சுமார் பத்து கிலோவுக்கும் அதிகமாக ஏரியில் உள்ளது.
திடீரென்று கடந்த இரண்டு நாட்களாக ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் இறந்து வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இது பற்றி பொதுமக்கள் கூறுகையில் ஏரியில் தூர்வாரி கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரைக்கும் ஏரியை தூர் வார வில்லை ஏரியில்உள்ள தண்ணீர் அனைத்தும் விஷம் கலந்த தண்ணீரை போல் மாறி உள்ளது.அதில் உள்ள தவளை மீன்கள் மற்றும் பிற உயிரினங்கள் அனைத்தும் அதிக அளவில் இறந்து உள்ளது . இதனால் திருச்சி துறையூர் சாலை அண்ணா பேருந்து நிலையம் ஆகிய பகுதியில் மக்கள் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித அதிகாரிகளும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் நடவடிக்கை எடுக்காததால் துறையூர் பகுதியில் ஏற்கனவே காய்ச்சல் பரவி வருகிறது. ஒருவேளை துர்நாற்றம் வீசுவதால் காய்ச்சல் பரவுகிறதா..? என்று கேள்விக்குறியாக உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு சின்ன ஏரியை தூர் வாரவும் அதில் இறந்து கிடக்கும் மீன்கள் மற்றும் தவளைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.