அங்குசம் பார்வையில் ‘தி பாரடைஸ்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

“கழுகுக்கு வரலாறு இருக்கு, காக்கைக்கு ஏன் வரலாறு இல்லை?” பின்னணியில் ஒரு பெண் குரல் ஒலிக்க கதை சொல்ல ஆரம்பிக்கிறார் டைரக்டர் ஸ்ரீகாந்த்  ஓடெலா. செகந்திரபாத் அருகே இருக்கும் மலையடிவாரத்தின் பாரடைஸ் பகுதியில்  சவாரி என்ற பழங்குடி இன மக்கள் வசிக்கிறார்கள். இவர்களை சாராயம் காய்ச்ச வைத்து அடிமையாகவே வைத்து நசுக்கிறான் ஷிகஞ்சா மாலிக் [மோகன்பாபு].  தங்களுக்கென எந்த அடையாளமும் சுதந்திரமும் இல்லாமல் அல்லாடும் அந்த மக்களின் தலைவனாக உருவெடுக்கிறான் சம்மக்காவின்[சோனாலி குல்கர்னி] மகன் ஜடல் [ நானி]. அதிகார வெறி கொண்ட மோகன்பாபுவையும் அவரது மகன் ராகவ் ஜூயலையும் எதிர்த்துப் போராடி ஜெயித்தானா ஜடல்? இதான் இந்த பாரடைஸ்.

Paradiseசொந்த நாட்டிலேயே இப்போதும் அடிமைகளாக வாழ்ந்து வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டு தினமும்  செத்துப் பிழைக்கும் மணிப்பூர் மக்களின் வாழ்க்கையைத் தான் படமாக எடுக்க முயற்சித்திருக்கிறார் டைரக்டர். ஆனால் படம் முழுக்க படுகொலைகள், ரத்த ஆறு தான். காலை மட்டும் வெட்டுகிறார் ஹீரோ, கையை மட்டும் வெட்டுகிறார், நிற்க வைத்து தலையைத் துண்டாக வெட்டுகிறார், நடுமண்டையில் கோடாரியைப் போட்டு உடலை ரெண்டு துண்டாக வெட்டுகிறார். இப்படி டிசைன் டிசைனாக வெட்டித் தள்ளுகிறார்கள் ஹீரோ நானியும் வில்லன் மோகன்பாபுவும். படம் மொத்தமும் எப்படியும் மூவாயிரம் பேரை படுகொலை செய்திருப்பார்கள், 25 டி.எம்.சி. ரத்த ஆறு ஓடியிருக்கும்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

Paradiseஇந்த ரணகளத்திலயும் குதூகலமாக நாம் இருப்பதற்கு கமிட் பண்ணப்பட்டவர் தான் கயாது லோஹர்.  அப்பன் பட்ட கடனை அடைப்பதற்காக பிரமீளா, ஷகிலா ரேஞ்சுக்கு பிட்டுப் படங்களில் நடிக்கிறார் கயாது. அதை டைரக்ட் பண்ணுகிறார் அவரது அம்மா. அடேங்கப்பா…. டேய்…. ஏண்டா இப்படி?

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பாரடைஸ்னு நினைச்சுப் போனவனுக்கு நரக வேதனை அனுபவம் தான்.

அங்குசம் பார்வையில் ‘தி பாரடைஸ்’ ??/ 100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.