ரீல்குட் ஃபிலிம்ஸின் மூன்றாவது பாடல் ரிலீஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ரீல்குட் ஃபிலிம்ஸின் மூன்றாவது பாடல் ரிலீஸ்!ரீல்குட் ஃபிலிம்ஸின் மூன்றாவது பாடல் ரிலீஸ்!  தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக போட்டி போடும் படம் ‘எலக்சன்’.

‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

வரும் 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..’ என தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகியுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்தப் பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத பின்னணிப் பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். மெலோடியான இந்தப் பாடல் திரையிசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம் பெற்று சார்ட் பஸ்டர் ஹிட்டாகியிருக்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.