அங்குசம் பார்வையில் ‘உயிர் தமிழுக்கு’

0

அங்குசம் பார்வையில் ‘உயிர் தமிழுக்கு’

தயாரிப்பு & இயக்கம்: ‘மூன் பிக்சர்ஸ்’ ஆதம் பாவா. நடிகர்—நடிகைகள்: அமீர், சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ஆனந்தராஜ், ராஜ்கபூர், சரவண சக்தி, மாரிமுத்து கஞ்சா கருப்பு, தொழில்நுட்பக் கலைஞர்கள்—இசை: வித்யா சாகர், ஒளிப்பதிவு: தேவராஜ், எடிட்டிங்: அசோக். பி.ஆர்.ஓ. ஏ.ஜான் .

சென்னை பெசண்ட் நகர் கடற்கரை. அதிகாலை 5 மணிக்கு வாக்கிங் போகும் சைதாப்பேட்டைத் தொகுதியின்   எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வான பழக்கடை ராமச்சந்திரன் [ ஆனந்தராஜ் ] வெட்டிச் சாய்க்கப்படுகிறார். இந்தக் கொலைக்குக் காரணம் ஆளும் கட்சியின் மா.செ.வான பாண்டியன் [ அமீர் ]  தான் என தமிழ்நாடே பரபரக்கிறது. இந்த பரபரப்பு, பதட்டமான நேரத்திலும் மத்திய அமைச்சரின் காரிலேயே வந்து ராமச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் பாண்டியன். தனது தந்தையைக் கொன்றது பாண்டியன் தான் என நம்புகிறார் ராமச்சந்திரனின் மகள் தமிழ்ச்செல்வி [ சாந்தினி ஸ்ரீதரன் ]  போலீசும் பாண்டியனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது.

இப்ப கட் பண்ணா… ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்.

- Advertisement -

- Advertisement -

தேனி அல்லிநகரத்தில் கேபிள் டி.வி நடத்துகிறார் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான பாண்டியன். உள்ளாட்சித் தேர்தல் தான் சாதிப்பகையை வளர்க்கிறது என்பதால் அந்தத் தேர்தலையே வெறுக்கும் பாண்டியனிடம், வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது தன்னுடன் வருமாறும் அழைக்கிறார், பாண்டியனின் மாமா சுடலை [ இமான் அண்ணாச்சி ].

உயிர் தமிழுக்கு - இயக்குநர் ஆதம்பாவா-
உயிர் தமிழுக்கு – இயக்குநர் ஆதம்பாவா

முதலில் மறுக்கும் பாண்டியன் மாமாவின் அன்பிற்காக வேட்புமனு தாக்கல் செய்ய நகராட்சி அலுவலகம் வருகிறார். வந்த இடத்தில் வேறு ஒரு வார்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வரும்  எதிர்க்கட்சித் தலைவர் பழக்கடை ராமச்சந்திரனின்  மகள் தமிழ்ச்செல்வியைப் பார்க்கிறார். தனது கொள்கையை லேசாக விலக்கிவிட்டு, மாமாவின் சிபாரிசின் பேரில் ஆளும் கட்சித் தலைவர் திருச்செல்வத்தை [ ராஜ்கபூர் ]ச் சந்தித்து வார்டு கவுன்சிலர் தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார். ஆளும் கட்சியில் அபார வளர்ச்சியடைகிறார் பாண்டியன்.

4 bismi svs

ராமச்சந்திரன் மரணத்தால் சைதை தொகுதிக்கு இடைத் தேர்தல் வருகிறது. இதில் தமிழும் பாண்டியனும் மோதுகிறார்கள். இதில் வெற்றி பெற்றது யார்? என்பதன் க்ளைமாக்ஸ் தான் ‘உயிர் தமிழுக்கு’.

Action political film
Action political film

தலைப்பில்  அரசியலைப் பிரதானப்படுத்தியிருந்தாலும் கதை என்னவோ.. தமிழ்[ சாந்தினி ] மீது உயிராய் இருக்கும் பாண்டியனின் காதலைத் தான் முன்னிறுத்தியுள்ளது. இந்தக் காதலுக்குள் அரசியல் புகுந்து சடுகுடு விளையாடுகிறது. இந்த சடுகுடு விளையாட்டை ரொம்பவே ரசித்து ஆடியிருக்கிறார் அண்ணன் அமீர். பொதுவாக ரொம்பவே செலக்டிவான படங்களில் வெயிட்டான கேரக்டர்களில் வந்து அசத்தும் அமீர், ‘உயிர் தமிழுக்’காக முழுக்க முழுக்க கதாநாயகன் அரிதாரம் பூசியிருக்கிறார்.

இந்த அரிதாரத்தைப்பூசி, அமீர் விளையாடுவதற்காகவே சடுகுடு மைதானத்தை மிகச்சரியாக தயார்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா. அதுக்காக சாவு வீட்டுக்கு அமீர் வரும் போது கூட வால்யூமைக் கூட்டி பில்டப் மியூசிக் போடுவது, கந்துவட்டி கம்பம் போஸுடன் மாஸ் ஃபைட்டெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் டைரக்டரே..  அதே போல்  படத்தின் இடைவேளை வரை, கதை விளையாட்டுத்தனமாகத் தான் போகிறது. எம்.ஜி.ஆரின் புகழ், பெருமையைப் போற்றி எம்ஜி.ஆர். ஸ்டைலிலேயே அமீர் பாடிஆடுவது அதிமுக பொதுக்கூட்ட மேடையில் நடனக் கலைஞர்களின் ரெக்கார்ட் டான்ஸ் பார்த்தது மாதிரி இருந்துச்சு.

உயிர் தமிழுக்கு
உயிர் தமிழுக்கு

ஆனால் இடைவேளைக்குப் பிறகு தான் கதையின் வேகமும் திரைக்கதையில் ஸ்பீடும் ஆரம்பிக்கிறது. அதிலும் கடைசி முக்கால் மணி நேரம் சைதாப்பேட்டை இடைத் தேர்தலின் வாக்கு எண்ணும் சீன் தான். அதை வெவ்வேறு கோணங்களில் கட் பண்ணி, கட் பண்ணிக் காண்பித்து சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் டைரக்டர் ஆதம்பாவா. அதே போல் ஹீரோயின் சாந்தினி ஸ்ரீதரன், பார்ப்பதற்கு தழுக் மொழுக்குன்னு கும்முன்னு இருக்கார், நடிக்கவும் செய்திருக்கார். கேரளாவிலிருந்து இறக்குமதியான இந்த தமிழ் என்ற சாந்தினிக்கு தமிழர்களின் நிபந்தனையற்ற ஆதரவு நிச்சயம் உண்டு.

அமீர்—இமான் அண்ணாச்சி கூட்டணி நம்பகமான காமெடிக் கூட்டணியாக வெற்றி பெற்றிருக்கிறது. “உழுபவனுக்கே நிலம் சொந்தம், கழுவுறவனுக்கே கக்கூஸ் சொந்தம். போங்கடா நீங்களும் உங்க வாக்குறுதியும். “நாங்க நம்புறது ஈவிஎம்மைத் தான்” போன்ற வசனங்கள் ஆதம்பாவா & அமீர் காம்போவின் சக்சஸ்.

– மதுரை மாறன் 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.