தேனி – கண்மாயை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் ! கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சித் தலைவர்
கொடுவிலார்பட்டி கண்மாயை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் அமைக்கும் அவலம்! கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சித் தலைவர்.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதியில் சுமார் 79 ஏக்கர் புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த புதுக்குளம் கண்மாய் முழுவதும் ஏராளமான ஆக்கிரமிப்பு செய்து மக்காச்சோளம், வாழை, தென்னை, உள்ளிட்டவை பயிர் செய்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த கண்மாயை ஆக்கிரமித்து தற்பொழுது கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினர், நீர்வள ஆதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, உடனடியாக புதுக்குளம் கண்மாயை தூர்வாரி ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.