அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நகராட்சியில் மாயமான பொருட்கள் ! திருடியது யார் ?

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி துறையூர் நகராட்சியில் மாயமான தளவாடப் பொருட்கள் ! திருடியது யார் ?

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் பல இலட்சம் மதிப்பிலான தளவாடப் பொருட்கள் திருடு போயிருப்பதாக ஆளும்கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கியிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

திருச்சி மாவட்டம் துறையூரில் புதியதாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வந்தது. அதற்கான மாற்று இடங்கள் குறித்த பஞ்சாயத்துகள் எல்லாம் ஓய்ந்து ஒருவழியாக, தற்போது செயல்பாட்டில் இருக்கும் பேருந்து நிலையத்தையே சற்று விரிவுபடுத்துவது என்பதாக முடிவானது.

இதனைதொடர்ந்து, பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலேயே இருந்த துறையூர் நகராட்சியின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தை பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது. அந்த பணிகளுக்கான டெண்டர்களும் விடப்பட்டது.

https://www.livyashree.com/

இந்நிலையில்தான், பழைய நகராட்சி அலுவலகத்தில் இருந்த பெரும்பாலான பொருட்களை காணவில்லை என்ற குற்றச்சாட்டை கவுன்சிலர்கள் தரப்பில் முன்வைக்கிறார்கள். இது தொடர்பாக, திமுகவை சேர்ந்த துறையூர் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக்கிடம் பேசினோம். “பழைய கட்டிடத்தை இடித்து தருவதற்குத்தான் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இடித்த பொருட்களைக்கூட நகராட்சியில் அவர்கள் ஒப்படைக்க வேண்டும் என்றிருக்கும் நிலையில், ஏற்கெனவே இருந்த பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை. இது குறித்து கேட்டால் முறையான பதில் இல்லை. ஒப்பந்ததாரரிடம் கேட்டால், இடிப்பதற்கு மட்டும்தான் நாங்கள் பொறுப்பு. இதற்கு முன் இருந்த பொருட்கள் குறித்த எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள்.

அதிகாரிகளை கேட்டால், பொருள் இருக்கிறது. எடுத்தவர்கள் மாலைக்குள் கொண்டு வந்து வைத்து விடுவார்கள் என்கிறார்கள். அப்படின்னா, திருடினது உண்மைதானே? எங்களது குற்றச்சாட்டையடுத்து, தற்போது நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் தலைவரும் சரி, மாவட்ட அமைச்சரும் சரி. அரசாங்க சொத்துல யாரும் கை வைக்கக்கூடாதுனுதான் சொல்லியிருக்காங்க. இது மக்கள் சொத்து சார். இதை எப்படி சாதாரணமா விட முடியும்?” என கேள்வி எழுப்புகிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

துறையூர் நகராட்சி சேர்மன் செல்வராணியிடம் பேசினோம். “அப்படி எல்லாம் எதுவும் இல்லையே. எல்லா பணிகளும் சரியாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது.” என குற்றச்சாட்டை மறுக்கிறார்.

நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை ஏற்கவில்லை. வாட்சப் வழி அனுப்பிய தகவலுக்கும் பதில் இல்லை.

கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெறும்போது, நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். பழைய நகராட்சி அலுவலகத்தில் இருந்த பொருட்களை கட்டிடத்தை இடிக்கும் முன்னரே, புதிய நகராட்சி கட்டிடத்திற்கு கொண்டு சேர்த்திருக்க வேண்டிய பொறுப்பு யாருடையது? அதை செய்யாமல், அங்கிருந்த பொருட்கள் வெளியில் சென்றது எப்படி? அதிலும் குறிப்பாக, ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான ஜெனரேட்டர் ஒன்றை குறிப்பிடுகிறார்கள். அது இப்போது எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை என்கிறார்கள்.

இதற்கு முன்னர், துறையூர் ஆத்தூர் சாலையில் நகராட்சிக்குட்பட்ட மயானத்தில் தகன எரிவாயு மேடை புணரமைப்பு பணிகள் நடைபெற்ற போதும், இதுபோலவே இலட்சம் மதிப்புள்ள இரும்பு தளவாடப்பொருட்களையும் யாரோ லவட்டிக் கொண்டு சென்று விட்டார்கள் என்பதாக புகார் தெரிவிக்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக, துறையூர் நகராட்சியில் அதிகாரிகளின் விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்படும் நிலையில், என்னதான் முடிவாகிறது என்று பொருத்திருந்துதான் பார்ப்போமே.

—              ஜோஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.