மதுரையில் 85 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் கும்பல் கைது !
தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் மதுரையில் பெரிய அளவில் நடைபெற்ற போதைப்பொருட்கள் கடத்தல் கும்பலை கைது செய்திருந்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொட்டம்பட்டி குமுட்ராம்பட்டி பிரவு அருகே மேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்டத்திற்குப் புறம்பாக 85 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சாவை TN 64 AA 0127 Eicher என்ற கனரக வாகனத்தில் கடத்தி வந்த கண்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், செய்ததில் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை சேர்ந்த மணி என்பவரின் மகன் சக்திவேல் என்பவர் மூலம் ஒரிசா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 85 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட TN 64 AA 0127 Eicher, ஒரு ஆன்டிராய்டு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலூர் மதுவிலக்கு காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சினறயில் அடைத்தனர். இச்செயலை சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு உயரதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.