‘டிரெய்ன்’—ல் ஸ்ருதிஹாசன் குரல்!
2023-ல் மிஷ்கின் டைரக்ஷனில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், டிம்பிள் ஹயாதி, நாசர் மற்றும் பலர் நடிப்பில் ‘டிரெய்ன்’ என்ற படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார் கலைப்புலி எஸ்.தாணு. அந்தா….இந்தா…ன்னு இழுஇழுன்னு ஒரு வழியாக இந்த 2025 டிசம்பரில் முதல் பாடல் ரிலீஸ் கண்டிஷனுக்கு வந்துள்ளது ‘டிரெய்ன்’.
கபிலன் எழுதியுள்ள ‘கன்னக்குழிகாரா” என்ற இந்தப் பாடலுக்கு மிஷ்கினே மியூசிக் பண்ணியுள்ளார். நடிகை, இசை ஆல்பம் டைரக்டர், பின்னணிப் பாடகி என பன்முக ஆற்றல் கொண்ட இந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். ஸ்கீரினில் விஜய்சேதுபதி வரும் இந்த சீக்வென்ஸில் ஸ்ருதியின் குரல் மென்மையான ஆன்மாவை சேர்த்தது போல் உள்ளது.
இசை ஆல்பம், அடுத்த சினிமாக்கள் குறித்த அப்டேட்டுகளை 2026—ல் ரிலீஸ் பண்ண ப்ளான் வைத்துள்ளாராம் ஸ்ருதி ஹாசன்.
— ஆண்டவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.