அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

TRB சர்ச்சை: மறு மதிப்பீடா? மறு தேர்வா? உயர் நீதிமன்ற வழக்கு – நிலை என்ன?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில், கடந்த 16.10-2025 தேதியிட்ட அறிவிப்பு எண் : 4/2025 இன்படி நடைபெற்ற தேர்வு மற்றும் அதன் முடிவுகள் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றன. குறிப்பாக, பகுதி – 2 இல் விரிவான விடையளி பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண்கள் வழங்கிய விவகாரம் பெருத்த சர்ச்சையாகியிருக்கிறது.

இந்த விவகாரத்தில், ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்பதாக டி.ஆர்.பி. முடிவெடுத்த விவகாரமே, தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொள்வதற்கான முன்வாய்ப்பை கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இந்த பின்னணியில்தான், சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளைகளில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்த விவகாரத்தில் முதல் முறையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்தான். ரிட்மனு எண்: 18903/2026 என்ற எண் கொண்ட அந்த மனுவை, விக்னேஷ்வரி, ஜெரால்டு ஆண்டனி ஆப்ரஹாம், செல்வி, கிளிமொழி, ஜினிஷா, சுரேஷ்குமார், சுபாஷ்மூர்த்தி, சினேகா, விவகா ஸ்டீபன், திவ்யபாரதி ஆகிய ஒன்பது பேரின் சார்பில் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

நீதியரசர் மும்முனினேனி சுதீர்குமார் முன்னிலையில் கடந்த ஜூலை-07 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, சுதந்திரமான துறை ரீதியான நிபுணர்கள் இடம்பெற்ற குழுவை அமைத்து, விசாரணை நடத்த வேண்டும்; விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார்.

யாவரும் கேளீர்

டி.ஆர்.பி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மத்கான், டி.ஆர்.பி.யின் முழுமையான குழுவினர் தாங்களே விசாரணையை நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.

இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரையில், பணிநியமனம் உள்ளிட்ட எந்தவிதமான அடுத்தகட்ட நடவடிக்கையையும் டி.ஆர்.பி. தரப்பில் முன்னெடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையை தெரிவித்த நீதிமன்றம், வழக்கை ஆக-04 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.

இந்நிலையில், இதே போன்ற கோரிக்கைகளுடன் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகள் அனைத்தும், தற்சமயம் நீதியரசர்  பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணையில் இருந்து வருகிறது. அரியலூரை சேர்ந்த சரவணதேவி மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த பெர்லின் ஆகியோர் தொடுத்த வழக்குகள் முக்கியமான வழக்குகளாக கருதப்படுகின்றன.

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

குறிப்பாக, பெர்லின் தரப்பில் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜராகி, மறு மதிப்பீடு செய்ய வேண்டும்; தவறு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பின் மறுத்தேர்வை நடத்த வேண்டும்; மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களின் நகல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்ற கோரிக்களை முன்வைத்திருக்கிறார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சி.கதிரவன் ஆஜராகி, டி.ஆர்.பி.யின் முழுக்குழுவும் இணைந்து ஆய்வு நடத்தப்போவதாக மதுரை கிளையில் சொன்ன அதே பதிலை இங்கேயும் சொல்லியிருக்கிறார். அரியலூர் சரவணாதேவி தொடர்ந்த வழக்கிலும், இதே பதிலை டி.ஆர்.பி. தரப்பில் தந்திருக்கிறார்கள். இதனையடுத்து, வழக்கின் விசாரணை ஆக-27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நிலுவையில் உள்ளதால், நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட தேர்வுக்கான அடுத்தகட்ட பணி நியமன நடவடிக்கைகளை (Further Recruitment) தேர்வு வாரியம் மேற்கொள்ளக் கூடாது என்ற தடை தொடர்கிறது. ஆக-04 ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில், விக்னேஷ்வரி மற்றும் 9 பேர் வழக்கில், டி.ஆர்.பி. என்ன பதிலை சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்துதான் இந்த வழக்கின் போக்கு மாறும்.

சர்ச்சைகள் எழுந்தாலும், மீண்டும் மறுதேர்வை நடத்த வேண்டும் என்பதை பெரும்பாலான மாணவர்கள் விரும்பவில்லை. ஒன்று பகுதி-2 இல் நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய தேர்வு முடிவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பகுதி-1 இல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிநியமனம் நடைபெற வேண்டும் என்பது ஒரு பிரிவினரின் கோரிக்கையாக இருக்கிறது. மற்றொரு தரப்பில், விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து முடிவு அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் இருக்கிறது. எது எப்படியோ, நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சுயேட்சையான நிபுணர்குழுவின் விசாரணை நடைபெற வேண்டும் அந்த விசாரணை முடிவுகளை பொறுத்துதான் இந்த விவகாரத்தில் தெளிவான முடிவை வந்தடைய முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். பார்ப்போம், ஆக-04 ஆம் தேதி விசாரணையில் என்ன நடக்கிறதென்று?

முழுமையான வீடியோவை காண

—  அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.