பணி நிரந்தரம் கோரி போராட்டம்! ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரதம்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பாக 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த மின்வாரிய பணியாளர்கள் தங்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்யக்கோரியும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

தவெக அரசு மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தங்களை ஒருமாத காலத்திற்குள் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்தர் ஆனால் அவர் கூறியபடி ஒரு மாதகாலத்திற்கு மேல் ஆகிவிட்டது.  தற்போது அவர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி தான் இந்த பணியில் சேர முடியும் என்கிறார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தற்போது தேர்வு எழுத வேண்டுமென கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. எங்களால் இனி தேர்வு எல்லாம் எழுத முடியாது. விரைவில் எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். இல்லை என்றால் எங்களது போராட்டம். மேலும் வலுவடையும் அடுத்த கட்டமாக சென்னையை நோக்கி மிகப்பெரிய அளவிலான மின் வாரிய  ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் இருக்கும் எனவும் அரசுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.