அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று பழங்குடியின மாணவன் சாதனை….

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்ணாடு  ஊராட்சி சின்ன இலுப்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் கடந்த 2024 -25 ஆண்டு கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற தோனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் மகன் பரத் என்பவர் தேசிய பல்கலைக்கழக சட்டக்கல்லூரி நடத்தும் பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் தேசிய சட்டக் கல்லூரி ஆனது இந்தியாவில்,

பெங்களூர், ஹைதராபாத் கல்கத்தா, ஜோக்பூர், ராய்ப்பூர், காந்திநகர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 24 இடங்களில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பரத்
பரத்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதில்  இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் படிப்பதற்காக CLAT என்று சொல்லக்கூடிய  பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் 28 பழங்குடியினர் பள்ளியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் வண்ணாடு ஊராட்சியில் உள்ள தோனூர் கிராமத்தை சேர்ந்த பரத் என்ற மாணவன் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இப்பகுதியில் உள்ள மக்கள் மாணவனை வெகுவாக பாராட்டியுள்ளனர் மாணவன் கூறுகையில் தாங்கள் மலை மக்கள் என்றும் தங்கள் பகுதி மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் இவர்களுக்குள் ஏற்படும் சட்ட பிரச்சனைகளை தீர்க்க ஒரு சட்ட வல்லுனர்கள் மட்டுமே முடியும் என்பதால் தான் மருத்துவம், பொறியியல், வேளாண்மை ஆகிய துறைகளை விடுத்து சட்ட படிப்பை தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார் இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு மாணவன் நன்றி தெரிவித்தார்.

குறிப்பு:  – இந்த மாணவர் தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் இரண்டு தம்பிகளுடன் பச்சைமலை பகுதியில்   வாழ்ந்து வருகிறார்.

– ஜோஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.