திருச்சி காவல் துறை உதவி ஆணையர் அருள் அமரன் லஞ்ச வழக்கில் கைது !
திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகாரின் பேரில் அருள் அமரன் கைது செய்யப்பட்டார்.
திருச்சியின் மிக முக்கியமான வழக்குகள் எல்லாம் பஞ்சாயத்து செய்து பணம் வசூல் செய்கிறார் என்கிற குற்றசாட்டு மிக நீண்ட காலமாக இருந்து வந்தது. இவர் பெயரை வைத்துக்கொண்டு இவருடைய மகன் ஒரு முறை பொது இடத்தில் மிகவும் வன்முறையாக நடந்து கொண்ட சம்பவமும் உண்டு.
இவர் வசூல் செய்து கொடுப்பதற்கு கமிஷன் பேசின பின்பு தான் வழக்கு பத்தியே பேசுவார் என்கிறார்கள். இவர்க்கு திருச்சியில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் எல்லோரும் மிக நெருக்கமாக இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.