1996ம் ஆண்டு மூடப்பட்ட ரயில் நிலையத்தை திறக்ககோரி உடையான்பட்டி மக்கள் கோரிக்கை

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

திருச்சி கே.கே.நகரை அடுத்துள்ள உடையான்பட்டியில் 50ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இரயில் நிலையமானது கே.கே.நகர், உடையான்பட்டி, சாத்தனூர், ஈச்சிகலாம்பட்டி, கவிபாரதிநகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்திருந்தது. இந்த ரயில் நிலையம் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இப்பகுதிமக்கள் சென்று வர மிகவும் உதவியாக இருந்தது. அதே நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், தினசரி கூலிவேலைக்கு சென்று வரும் தொழிலாளர்களுக்கு அதிகளவில் பயன்பட்டது.

இந்நிலையில், மக்கள் தொகை, ரயில் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதியம் உள்ளிட்டவையை கணக்கிட்டு பார்க்கையில் இந்த ரயில் நிலையம் லாபகரமாக இல்லாதமையால், கடந்த 1996ம் ஆண்டு உடையான்பட்டி ரயில் நிலையம் கடந்த மூடப்பட்டது. ரயில் நிலையம் இல்லாவிட்டாலும், மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு ரயில் நிலையமாவது தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் அதுவும் ஏற்கப்படவில்லை.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இதைத்தொடர்ந்து, அகல ரயில் பாதை பணி தொடங்கிய போது, உடையான்பட்டி ரயில் நிலையத்தின் நடைமேடையும், கூடுதலாக இருந்த மீட்டர் கேஜ் தண்டவளங்களும் அப்புறப்படுத்தப்பட்டது. இருப்பினும் முயற்சியை கைவிடாதமக்கள் தங்கள் கோரிக்கையினை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், இரயில்வே கோட்ட மேலாளர், ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என அனைத்து தரப்பினரிடமும் முன்வைத்து கொண்டே இருக்கின்றனர்.

1996ம் ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும் போது திருச்சி மாநகராட்சியானது மக்கள் தொகையில் தற்போது அசுரவளர்ச்சி அடைந்துள்ளது. கிட்டத்தட்ட மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மூன்று மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. மேலும், திருச்சி தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் என பல்வேறு ரீதியில் வளர்ச்சியினை கட்டுள்ளது. அதுமட்டுமின்றி, திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பலர் திருச்சியில் வேலை செய்து வருகின்றனர்.

3
உடையான்பட்டி ரயில் நிலையம்

இதன் விளைவாக உடையான்பட்டி இரயில் நிலையத்தை சுற்றி அமைந்திருக்கும் கே.கே.நகர், உடையான்பட்டி, சாத்தனூர், ஈச்சிகலாம்பட்டி, கவிபாரதிநகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2,30,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மீண்டும் உடையான்பட்டிக்கு ரயில் நிலையம் வரும் பட்சத்தில் நிச்சயம் லாபகரமாக இயங்குவது மட்டுமின்றி மக்களின் பயன்பாட்டிற்கும் உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

4

இது குறித்து உடையான்பட்டி ரயில் நிலையம் மூடப்பட்ட போது அங்கு பணியாற்றிய ராமசந்திரன் கூறுகையில், இரயில்வே துறையில் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வந்தபோது, உடையான்பட்டி ரயில் நிலையத்திற்கு திருச்சி ரயில்நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், உடையான்பட்டி இரயில் நிலையத்தில் இருந்து அவ்வளவு வருமானம் வரவில்லை. எனவே, இதை மூடிவிட்டனர்.

 

ராமசந்திரன்

என்னுடன் பணியாற்றிய 15க்கும் மேற்பட்டோரை வெவ்வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்துவிட்டனர். என்னை குமாரமங்கலம் ரயில் நிலையத்திற்கு மாற்றினர். என்னுடன் பணியாற்றிய 70க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் சேர்ந்து எங்களின் பாஸை காண்பித்து, ‘உடையான்பட்டியில் இரயில் நிறுத்தமாவது தாருங்கள் எங்களுக்கும் எங்கள் பகுதிமக்களுக்கும் உதவியாக இருக்கும் என்று கேட்டோம்’. ஆனால் தரமறுத்துவிட்டனர். தற்போதைய சூழ்நிலை முன்பை போல இல்லை. மக்கள் தொகை அதிகரித்து விட்டது. வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிவிட்டது. இப்போது உடையான்பட்டிக்கு இரயில் நிலையம் வந்தால் நிச்சயம் லாபகரமாக இயங்கும் என்றார்.

 

 

முகமது ஆரிப்

உடையான்பட்டியில் இரயில் நிலையம் வேண்டி போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த சகாபுதீன் மற்றும் முகமதுஆரிப் கூறுகையில், உடையான்பட்டியில் 20வருடத்திற்கு முன்னதாக இரயில் நிலையம் இருந்தது. மக்கள் பயணம் குறைவாக இருந்ததால், நஷ்டமாக சென்று கொண்டிருந்தது. அதனால் மூடிவிட்டனர், தற்போது மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துவிட்டது. படிப்பு, தொழில் என மக்கள் தினமும் நகரங்களுக்கு செல்லவேண்டிய தேவையும் அதிகரித்துவிட்டது. உடையான்பட்டிகோ அதன் சுற்றுப்புறகிராமங்களுக்கு பேருந்துகள் வசதி மிக குறைவு. கே.கே.நகர் சென்றால்தான் ஒரளவிற்கு பேருந்துகள் இருக்கும். இந்நிலையில், இங்கு ரயில் நிலையம் வந்தால் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

 

பெரியசாமி

இதை வலியுறுத்தியே நாங்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், ஆளுநர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை வைத்து கொண்டிருக்கிறோம். உடையான்பட்டி இரயில் நிலையம் மதுரை இரயில் கோட்டத்துடன் சேர்ந்தது என்பதால் மதுரை கோட்ட மேலாளரிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் இரயில் நிலையம் அமைத்து தருவதாக கூறினார். ஆனால் இன்றுவரையில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. என்றனர்.

சாத்தனூரில் அன்னை மெடிக்கல் வைத்துள்ள பெரியசாமி கூறுகையில், நான் இப்பகுதியில் 20வருடங்களாக வசித்து வருகிறேன். உடையான்பட்டி இரயில் நிலையம் மதுரைக்கோட்டத்தில் வருவதால் யாரிடம் சென்று கோரிக்கை வைப்பது என்று தெரியவில்லை. அதேபோல நம்முடைய கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என்பதும் தெரியமலே உள்ளது. இங்கு அரசு ஊழியர் அதிகம் வசிக்கின்றனர். அதேபோல புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். எனவே, உடையான்பட்டியில் இரயில் நிலையம் வர அரசு நடவடிக்கை மேற்கொண்டால் உதவியாக இருக்கும் என்றார்.

 

சகாபுதீன்

இது குறித்து கவிபாரதி நகரில் வசிக்கும் கீதா கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்துடன் இப்பகுதியில் வசித்து வருகிறேன். இப்பகுதியில் 3லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வரும் நிலையில், மீண்டும் இரயில் நிலையத்தை அமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வராதது ஆச்சரியமாக உள்ளது. தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குமாரமங்கலம் வரையில் சைக்கிளில் சென்று அங்கிருந்து ரயிலின் மூலம் பள்ளிக்கு செல்கின்றனர். கூலித்தொழிலாளர்களுக்கும் அதே நிலையே. இந்த அவலநிலையை முன்வைத்து பலமுறை கோரிக்கைகளை வைத்துவிட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

மக்களுக்காக சேவை மனதுடன் செயல்பட்டு அவர்களின் பொருளாதார மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டிய ரயில்வே நிர்வாகம். லாபத்தை காரணம் காட்டி இந்த இரயில் நிலையத்தை அகற்றியுள்ளது. ஆனால், தற்போது ரயில் நிலையம் அமைக்க தேவையான அனைத்து அடிப்படை தகுதிகள் இருந்தும் மக்களின் கோரிக்கையினை ரயில்வே நிர்வாகம் ஏற்க மறுக்கிறது. இது எந்த வகையில் நியாயம் என்றார்.

புதர் மண்டிய நிலையில் காணப்படும் உடையான்பட்டி ரயில் நிலையம்

உடையான்பட்டி ரயில்நிலையம் குறித்து எம்பிகளின் வாக்குறுதிகள்…

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் ‘உடையான்பட்டியில் மீண்டும் ரயில் நிலையம் அமைக்க நாடாளுமன்றத்திலும், ரயில்வே அதிகாரிகளிடமும் வலியுறுத்தியுள்ளேன். ரயில் நிலையம் அமைக்க தொடர்ந்து முயற்சிக்கப்படும்’ என தெரிவித்தார்.
மதுரை எம்பி கோபாலகிருஷ்ணன் ‘எனது தொகுதி இல்லை என்றாலும், திருச்சிவாசிகளின் நலன்கருதி மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் பேசி, விரைந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வேன்’ என்றார்.

 

-ச.பரத்

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.