சொத்துவரி நிலுவை! மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை!
சொத்து உரிமையாளர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம். 30-ந்தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியையும், அக்டோபர் மாதம் 30-ந்தேதிக்குள் 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியையும் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்குள் செலுத்தினால் மாநகராட்சி சார்பில் 5 சதவீத ஊக்கத்தொகை (அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை) வழங்கப்பட்டு வருகிறது.
அதேநேரம் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை செப்டம்பர் 30-ந்தேதிக்குள்ளும், 2-வது அரையாண்டுக்கான சொத்துவரியை மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். இந்த தேதிக்கு பிறகு செலுத்தப்படும் அரையாண்டு சொத்துவரிக்கு, எவ்வளவு நிலுவை தொகை உள்ளதோ அதற்கு. ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு சதவீதம் வட்டி அபராதமாக விதிக்கப்படும். இதனால் கடந்த நிதியாண்டில், திருச்சி மாநகராட்சியில் சொத்து வரி, காலி நில வரி, தண்ணீர் கட்டணம், நிலத்தடி நீர் கட்டணம் மற்றும் தொழில் வரி உள்ளிட்ட மொத்த வரியினத்தில் 91 சதவீதம் வசூல் ஆனது குறிப்பிடத்தக்கது.




Comments are closed, but trackbacks and pingbacks are open.