மும்பைக்கு போட்டியாக துணிந்து இறங்கிய திருச்சி சினிமா நடிகை ! படங்கள் ஆல்பம் !
மும்பைக்கு போட்டியாக துணிந்து இறங்கிய திருச்சி பொண்ணு!
நம்ம திருச்சியில் பிறந்த பொண்ணு தான் அனுகீர்த்தி வாஸ். பள்ளிப் படிப்பை அங்கே முடித்துவிட்டு, சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, மாடலிங் உலகில் என்ட்ரியானார் .
மாடலிங் இளம் மங்கைகளின் அடுத்த முக்கியமான இலக்கு சினிமா தான் என்ற இலக்கணப்படி பொன்ராம் டைரக்ட் பண்ணிய ‘டிஎஸ்பி’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவுக்குள் ஃபர்ஸ்ட் எண்ட்ரி போட்டார் அனுகீர்த்தி. படம் ஃப்ளாப் ஆனதாலும் அனுகீர்த்தியும் ஒடிசலான உடல்வாகு, கிளாமர் கம்மியாக தெரிந்ததால் தமிழில் அடுத்த பட வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டவில்லை.
ஆனாலும் அசராத அவர், தெலுங்கு சினிமாவின் மீடியேட்டர்கள் மூலம் ஆந்திராவில் ‘லேண்ட்’ ஆனார். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ் ‘ பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி ‘ படங்களில் ‘செகண்ட்’ ஹீரோயினாக கமிட் ஆகி, தெலுங்கு சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்கள், ஹீரோக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுவிட்டார்.
ஆனாலும் தமிழ் சினிமாவில் ‘ஸ்ட்ராங் பொசிஷன்’ வேண்டும் என்பதற்காகவே பாடியை மெருகேற்றி, கிளாமர் தூக்கலாக ஃபோட்டோ ஷூட் நடத்தி வாரம் ஒருமுறை அந்த ஸ்டில்ஸ்களை தனது பி.ஆர்.ஓ. பிரியா மூலம் ரிலீஸ் பண்ணி வருகிறார்.
இந்த 2024-ல் எப்படியும் நான்கைந்து தமிழ்ப் படங்களிலாவது கமிட் ஆகிவிடவேண்டும் என்ற வேட்கையுடன் சான்ஸ் வேட்டையில் இறங்கியிருக்கார் அனுகீர்த்தி வாஸ்.
-மதுரை மாறன்