மலேசிய எழுத்தாளர் சங்கத்துடன் புனித சிலுவை கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி, புனித சிலுவை கல்லூரி  கருத்தரங்கில் மலேசிய எழுத்தாளர் சங்கம் இராஜேந்திரன் பங்கேற்பு. மலேசிய எழுத்தாளர் சங்கத்துடன் புனித சிலுவை கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

102 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி, புனிதச் சிலுவை தன்னாட்சிக் கல்லூரியுடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புரிந்துணவு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 6.8.2025ஆம் தேதி நடைபெற்ற “இந்தியச் சிந்தனையில் செவ்வியல் இலக்கியங்கள்” தலைப்பில் நடந்த கருத்தரங்கின் சிறப்பு அங்கமாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடந்தது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் பெ.இராஜேந்திரன், கல்லூரி முதல்வர் முனைவர் அருள்ஜோதி இராஜகுமாரி அவர்களும் கையெழுத்திட்டனர். இருவழி கல்வி இலக்கிய பரிமாற்ற திட்டங்களுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். குறிப்பாக, மலேசிய இலக்கியம் குறித்தும் இலக்கியவாதிகள் பற்றியும்  கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்வதற்கும் மலேசியப் படைப்புகளைப் பாடநூல் ஆக்குவதற்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைபுரியும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

ஏற்கனவே சில கல்லூரிகளில் இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அங்கு மலேசிய இலக்கியங்கள்  பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புனித சிலுவை கல்லூரி  “இந்தியச் சிந்தனை மரபில் செவ்வியல் இலக்கியங்கள்”  எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் 52 கட்டுரைகள் படைக்கப்பட்டன. அந்த கட்டுரைகள் நூலாக்கப்பட்டு வெளியிடப்பட்டன. கல்லூரி முதல்வர் முனைவர் இராஜகுமாரி நூலை  வெளியிட, முதல் நூலை மலேசியாவைச் சார்ந்த இராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். இந்தக் கருத்தரங்கிற்காக மலேசியாவை சார்ந்த மன்னர் மன்னன் மருதை, ஈஸ்வரி குணசேகரன் ஆகியோர் படைத்தளித்த கட்டுரைகளும்  நூலில் இடம் பெற்றிருக்கிறது. கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பிரேமா இந்த முன்னெடுப்பில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற துணை புரிந்தார்.

மாலை நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவிற்குத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பிரேமா தலைமை தாங்கினார். விழாவில் தமிழ்நாடு அரசின் சிந்தனை சிற்பி சிங்காரவேலனார் விருது பெற்ற முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி சுப்பிரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

புனித சிலுவை கல்லூரி  பின்னர் கருத்தரங்கப் பேரளார்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ் விழாவில் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து, அங்குசம் செய்தி இதழ் பொறுப்பாசிரியர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், தேனி தமிழ் ஆர்வலர் மணிகண்டன் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

 

—  சிறப்பு செய்தியாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.