ரூ 6,000 லஞ்சம் கேட்ட திருச்சி சர்வேயர் கைது !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

 

ரூ 6,000 இலஞ்சம் கேட்ட திருச்சி சர்வேயர் கைது!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்வட்டம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் ரமேஷ் குமார் (வயது 51). இவர் திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் கடை சொந்தமாக நடத்தி வருகிறார்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

இவருக்கு கல்பாளையம் கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது. ரமேஷ் குமார் தனது தொழிலுக்கு பணம் தேவைப்பட்டதால் தனக்கு சொந்தமான வீட்டின் பேரில் வங்கியில் கடன் கோரியுள்ளார்.

3

தான் கடன் பெறுவதற்கு தனது வீட்டுமனையை உட்பிரிவு செய்து பட்டா பெற்று வருமாறு வங்கியில் கேட்டதன் பேரில் ரமேஷ் குமார் தனது வீட்டினை உட்பிரிவு செய்து தனிப்பட்டா வேண்டி கடந்த 13.7.2023 அன்று விண்ணப்பித்துள்ளார்.

தான் விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால் ரமேஷ் குமார் மணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவுக்கு கடந்த 28.8.2023 அன்று கல்பாளையம் பிர்கா சர்வேயர் கருப்பையா (வயது 48) என்பவரை சந்தித்து, தனது விண்ணப்பத்தின் பேரில் உட்பிரிவு செய்து வழங்க வேண்டுமாறு கேட்டுள்ளார்.

4

அதற்கு பிர்கா சர்வேயர் கருப்பையா ஒரு வாரம் கழித்து தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். அதன் பேரில் ரமேஷ் குமார் கடந்த 5.9.2023 அன்று பிர்கா சர்வேயர் கருப்பையாவை சந்தித்து தனது வேலையை முடித்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

அதற்கு சர்வேயர் கருப்பையா தனக்கு 6000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் சப் டிவிஷன் வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளார். பின் ரமேஷ் குமார் கேட்டுக் கொண்டதன் பேரில் ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு 5000 கொடுத்தால் மட்டுமே சப் டிவிஷன் வேலையை முடித்து கொடுக்க முடியும் என்று கருப்பையா கண்டிப்புடன் கூறியுள்ளார். கருப்பையாவிடம், ரமேஷ் குமார் இரண்டு மூன்று நாட்களில் பணத்துடன் வந்து சந்திப்பதாக சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ் குமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று 08.09.2023 மதியம் சுமார் 12 மணியளவில் கருப்பையாவை சமயபுரம் பைபாஸ் சாலையில் சந்தித்து ரமேஷ்குமார் பணத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் திருமதி சேவியர் ராணி ஆகியோர்கள் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கருப்பையாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து மணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.