காவல்துறை அதிகாரிகளிடம் கெத்து காட்டும் ஆல் இன் ஆல் ரைட்டர்
காவல்துறை அதிகாரிகளிடம் கெத்து காட்டும் ஆல் இன் ஆல் ரைட்டர்
தமிழகத்தின் மையப்பகுதி மாவட்டத்தின் மாநகரில் காவல்துறை உயர் அதிகாரியின் கீழ் உள்ள ரைட்டர் ஒருவரின் வசூல் வேட்டையில் கண்டுபிடித்து ஆயுதப்படைக்கு மாற்றுவதும், ரைட்டர் தனக்கு உள்ள அரசியல் மற்றும் அதிகாரிகள் துணையோடு மீண்டும் பணிக்கு வருவது என கெத்து காட்டும் ரைட்டர் குறித்த செய்தி இது…
திருச்சி மாநகரம் அரசு மருத்துவமனை ( GH ) காவல் நிலையத்தில் ரைட்டராக இருப்பவர் தலைமை காவலர் செல்லப்பாண்டியன் இவர் திருச்சியின் பிரபல கள்ளலாட்டரி லாட்டரி பிரதர்ஸ் என்று அழைக்கப்படுபவர்களும் திருச்சி திமுகவின் இரண்டு அமைச்சர்களும் நாங்க என்ன சொன்னாலும், அப்படியே கேட்பார்கள் என்று சொல்லும் எஸ்.வி.ஆர். வரதன், எஸ்.வி.ஆர். மனோகர் பிரதர்ஸ்க்கு நெருங்கிய உறவினர்.
அரசியல், அதிகார பலத்துக்கு நெருக்கமான உறவினர் என்பதால் அவர் வேலை செய்யும் இடத்தில் அவர் தான் உயர் அதிகாரி, உறையூர் காவல் நிலையத்தில் ஏழு வருடங்களாக ரைட்டராக இருந்தார்.
சமூக விரோத தொழில் செய்பவர்களுடன் நெருக்கமாகவும், சட்டவிரோத அத்தனைக்கும் அவர் தான் வசூல் ராஜா என்கிறார்கள்.
திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு தேவை அறிந்து அனைத்தையும் செய்து கொடுப்பதால் மாநகர் முழுவதும் அவரது செல்வாக்கு பரவி உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு திருச்சி கமிஷனராக அருண் IPS இருந்த போது… கள்ளாலாட்டரியின் விற்பனை தினமும் கோடிக்கணக்கில் அப்பாவி பொதுமக்களிடம் ஏமாற்றுவதும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததுடன், அப்படி விற்கப்படும் சீட்டில் பரிசு விழுந்தாலும், அந்தப் பணத்தை அளிக்காமல் ஏழை மக்களையும், கூலித் தொழிலாளர்களையும் ஏமாற்றியதை உணர்ந்து அதிரடியாக திருச்சியில் SVR மனோகரனின், விநியோகஸ்தர்களான புத்தூர் தங்கதுரை, கல்லாங்காடு சிவா, நாச்சிக்குறிச்சி குண்டு கண்ணன், அரியமங்கலம் பாபு, பாலக்கரை கார்த்திக், காந்தி மார்க்கெட் கணேசன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கள்ள லாட்டரி விற்பனையாளர்களை கைது செய்தனர், அதில் எஸ்.வி.ஆர். மனோகரனும் அடக்கம், கள்ளலாட்டரி தொழிலுக்கு உடைந்தையாக இருந்த 11 போலிசார்களையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.வி.ஆா் மனோகரன் மீது குண்டாஸ் வழக்கும் பாய்ந்தது.
கமிஷனர் அருண் டிரான்ஸ்பர் ஆனபிறகு அதன் பிறகு மனோகரன் கள்ளலாட்டரி தொழிலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், அவருடைய சகோதரர் எஸ்.வி.ஆர். வரதன் முழுநேரமாக இந்த தொழிலை செய்து வருகிறார். தற்போது திருச்சி மாநகரில் உள்ள டாஸ்மார்க் “பார் ”பணத்தை வசூல் செய்யும் முக்கிய வேலையும் செய்து வருகிறார்.
திருச்சி காவல் துறை கமிஷனராக மீண்டும் அருண் வந்த போது செல்லபாண்டியனின் வசூல் வேட்டையை தெரிந்த அவர், செல்ல பாண்டியனை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். காவல் ஆணையர் அருண் மாறுதலில் சென்ற பிறகு நுண்ணறிவு பிரிவு உயர் அதிகாரியின் அதிகார பலத்தில் மீண்டும் உறையூர் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்து தனது வசூலை தொடர்ந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தீபாவளியின் போது பத்து எல் வசூல் இலக்கு என்ற நிலையில் களத்தில் இறங்கிய செல்ல பாண்டியன் 8 எல் வசூல் செய்து முடித்த நிலையில் காவல் துறை கமிஷனர் கார்த்திகேயன் IPS க்கு விஷயம் தெரிய வரவே, செல்ல பாண்டியனை மீண்டும் ஆயுதப்படைக்க மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதற்குப் பிறகு மந்திரிகளின் சிபாரிசில் மீண்டும் பணி மாற்றம் செய்யப்பட்டு அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு வந்தவர் ரைட்டராக சேர்ந்தார்
அதே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையில் மாற்றல் ஆகி வந்த பெண் ஆய்வாளரிடம் உதவியுன் இந்த ஆண்டு 10 எல் இலக்குடன் தீபாவளிக்கு சொல்லி களமிறங்கி முக்கால்வாசி வசூல் முடித்த நிலையில், இவரது வசூல் வேட்டை குறித்து பல ஆதாரங்கள் உளவுப்பிரிவு மேலிடத்திடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பியது.
இதன் காரணமாக காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் கடந்த 20.10.2022 அன்று செல்லப்பாண்டியன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். செல்ல பாண்டியனை காப்பாற்ற வேண்டும் தனக்கு விசுவாசமான நுண்ணறிவு பிரிவு அதிகாரியின் ஆலோசனைப்படி செல்ல பாண்டியன் மருத்துவ விடுப்பில் சென்றதாக அனுப்பி உள்ளனர்.
சமீபத்தில் செல்லப்பாண்டியன் தனக்கு உதவியாக இருக்கும் அந்த பெண் ஆய்வாளரின் வீட்டிற்கு ஐம்பதாயிரம் ரூபாயில் சிசிடிவி கேமரா பொருத்தி கொடுத்துள்ளார். மேலும் ஒரு லட்ச ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஆயுதப்படை இடமாற்ற உத்தரவை பெறாமல் சென்ற செல்லபாண்டியன் கமிஷனர் கார்த்திகேயன் IPS திருச்சியில் இருந்து இடமாற்றம் செய்துவிட்டு, தான் மீண்டும் ஏதாவது ஒரு காவல் நிலையத்திற்கு ரைட்டராக வருவேன் அதற்கான வேலையில் பிஸியாக இருக்கிறார் என்கிறார்கள்.
குற்றச்சாட்டுகள் குறித்து ரைட்டர் செல்லப்பாண்டியனை தொடர்பு கொண்டு கேட்டபோது..தொய்வான குரலில்… சார்.. நா.. உடம்பு சரியில்லாமல் ஊரில் இருக்கேன் சார்.. எனக்கு எதுவும் தெரியாது சார், அது உண்மையில்லை சார் என்றார்.