நீ இன்னும் என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிக்கிட்டு இருக்கயில்ல???

0

 

நீ இன்னும் என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிக்கிட்டு இருக்கயில்ல???

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

மாதம் 300 ரூபாய் என 12 மாதத்துக்கு சீட் கட்டினால், தீபாவளி அல்லது பொங்கலுக்கு 15 கிலோ துவரம் பருப்பு, 10 கிலோ க.பருப்பு, 10 கிலோ உ.பருப்பு, 10 லிட்டர் சன் பிளவர் ஆயில், 1 லிட்டர் க.எண்ணெய், 25 கிலோ சிப்பம் பொன்னி அரிசி, 1 கிலோ பிரியாணி அரிசி, பட்டாசு பாக்ஸ், இனிப்பு பாக்ஸ் என சுமார் 50க்கும் அதிகமான பொருட்கள் வழங்குவதாக பட்டியலில் இருந்தது. இப்படி 5 விதமான தவணை திட்டங்கள் வழியாக மக்களிடம் பணத்தை வசூல் செய்தது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரை சேர்ந்த ஒரு சீட் நிறுவனம்.

முகநூலில் பதிவு

- Advertisement -

இப்படியொரு மோசடி நடப்பது குறித்து கடந்தாண்டு எனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன். நான் எச்சரித்த அந்த நிறுவனம், இந்தாண்டு பட்டை நாமத்தை வாடிக்கையாளர்களுக்கு சாத்திவிட்டது. பொருட்களை தரவில்லையென பணம் கட்டிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள் செய்யார் நகரில் சாலைமறியல் செய்தனர். திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கோனோர் பணம் கட்டிவிட்டு ஏமாந்துப்போய் நிற்கிறார்கள்.

இந்த நோட்டீஸ்சை கடந்த ஆண்டு தீபாவளியின்போது என்னிடம் காட்டிய என்ர வீட்டம்மா, எங்கவூர்ல எல்லோரும் கட்டியிருக்காங்க. நாமளும் ஒரு சீட் போடலாம்ங்க, ஒரே தவணையா 3000 ரூபாய் கூட கட்டிடலாமாம் என வேப்பிளை அடிக்கத்துவங்கினார்.

இந்த நோட்டீஸ்ல சொல்லியிருக்கற பொருட்கள் தர்றதுக்கு வாய்ப்பே இல்ல. மோடி வாயில வடை சுரடறதை நம்பும் சங்கி கூட்டம்மாதிரி, நீ இதலயிருக்கறதை நம்பாத, ஏமாத்திடுவான்னு பிரதமர் மோடியை உதாரணம்காட்டியே சொன்னேன்.

4 bismi svs

கட்டறவங்க முட்டளா? ஆரணியில எவ்ளோ பேர் கட்டறாங்க தெரியுமா? தீபாவளிக்கு 20 நாளைக்கு முன்னாடியே பொருள் கொண்டுவந்து வீட்லயே தர்றாங்க. இரண்டு வருசம்மா எங்கம்மாவே வாங்கிக்கிட்டுயிருக்காங்க.

வாங்கறாங்கன்னா சந்தோஷம், நான் கட்டல என்னை ஆளைவிடு என்றதும் மறைமுகமாக வசைப்பாடதுவங்கினார். உலகில் கணவன் சொல்லுக்கு நேர்எதிராக செய்வது துணையானவர்களின் வழக்கத்தின்படி, என்ர வீட்டம்மா 3 ஆயிரம் ரூபாய் ஒரேசெட்டில்மென்டாக பணம் கட்டியதாக கூறினார். ( அப்போதே திருடனை அழைத்து இந்தாடா இந்த பணத்தை எடுத்துக்கிட்டு போ என வழியனுப்பிவச்சாச்சி என நினைத்துக்கொண்டேன்.)

பத்திரிகைகளில் செய்தி
பத்திரிகைகளில் செய்தி

 

கடந்தவாரம் தீபாவளி மளிகை பொருட்கள் வாங்க பணம் வேண்டும் எனக்கேட்டார் துணைவியார். (அவர் பணம் கேட்ட அதேநாளில் செய்யார் நகரில், அந்த கம்பெனி வாசலில் ஏமாந்தவர்கள் சாலை மறியல் செய்துக்கொண்டுயிருந்தார்கள்.)

நீதான் தீபாவளி சீட் போட்டியே?

நான் பொங்கலுக்கு தான் போட்டுயிருக்கன், பொங்கலுக்கு முன்னாடி பொருள் தருவாங்க.

#தலைப்பை மீண்டும் படிக்கவும்….

– ராஜ்பிரியன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.