மாவட்ட செய்தியாளர்களை பதறடிக்கும் அதிமுக எம்பி 😱😳🧐
செய்தியாளர்களை பதறடிக்கும் அதிமுக எம்பி
தேனி மாவட்ட எம்.பி யாக ரவீந்திர நாத் செயல்பட்டு வருகிறார்.
மதுரை – போடி ரயில் திட்டத்தில், மதுரையில் இருந்து தேனிக்கு பயணிகள் ரயில் சேவை கடந்த மே மாதம் 27 மாதம் துவங்கியது.
சென்னையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதற்கான விழா தேனி ரயில் நிலையத்தில் நடந்தது. இவ் விழாவிற்காக தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் 10க்கும் மேற்பட்ட முன்னணி காலை,மாலை, நாளிதழ்களுக்கு விளம்பரம் கொடுத்தார்.

இதற்கான
விளம்பரம் பில் எம்பியிடம் கொடுத்த விட்டு பணம் கிடைக்காமல் செய்தியாளர்கள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வாரம், அடுத்த வாரம் தந்து விடுகிறேன் என ஜகா வாங்கி வருகிறார்.
தேனி மாவட்டத்திற்கு கடந்த 15 தினங்களுக்கு எஃகு மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான ஒன்றிய அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தேவை எம்பி ரவீந்திர நாத் அழைத்து வந்தார்.
விளம்பரம் பணம் கிடைக்காத பத்திரிக்கையாளர்கள் எம்பியை சந்தித்து விளம்பர பணம் கேட்ட போது ஒரு வாரத்தில் தருவதாக கூறி சென்றார்.
ஒரு வாரம் கடந்த நிலையில் உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் ஜல் சக்தி துறை ஒன்றிய இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேலை எம்பி ரவீந்திரநாத் அழைத்து வந்த போது இரண்டு முன்னணி செய்தியாளர்கள் விளம்பர பாக்கி தொகை கேட்ட போது தீபாவளிக்கு முன்பாக கொடுத்து விடுகிறேன் என்றார்.
தீபாவளிக்கு முன்பு விளம்பர பாக்கி பணம் வரும் என்ற நம்பிக்கையுடன் இருந்த பத்திரிக்கையாளர்கள் ஏமாற்றத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.
மே மாதம் விளம்பரம் கொடுக்கும் போது ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தது.
இப்போது அதிமுக கட்சி பிளவுபட்டு கிடக்கிறது.
விளம்பர பாக்கி வைத்துள்ளதால் அடிக்கடி அவர் சார்ந்த செய்திகளை முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி செய்தி போட சொல்லி நிர்பந்திப்பதால் விளம்பர பாக்கிக்காக செய்தி வெளியிடும் அவல நிலைக்கு பத்திரிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
விளம்பரம் வெளியிட்டு 5 மாதங்கள் ஆகி விட்டதால் விளம்பரம் வெளியிட்ட நிறுவங்கள் அந்தந்த செய்தியாளர்களை கிடுக்கிபிடி, நெருக்கடி கொடுத்து வருகின்றனர்
இதனால் செய்தியாளர்கள் அலுவலங்களின் நெருக்கடி ஒரு பக்கம், எம்பியிடம் பணம் வாங்க முடியாமல் தவிப்பது ஒரு பக்கம் என செய்தியாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.