திருச்சி போலீஸ்காரர் வீட்டில் பல கோடி செம்மரக்கட்டை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கரூர் குளித்தலை அருகே மினி லாரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பி லான 5 டன் செம்மரக் கட்டைகளை நேற்று பறிமுதல் செய்த மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர், வீட்டு உரிமையாளரான பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கோடங்கிபட்டியைச் சேர்ந்தவர் திருவேங்கடம்(70). ஓய்வுபெற்ற வருவாய்த் துறை அலுவலர். இவரது மனைவி லதா(58), அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர்களது மகன் கிஷோர், திருச்சி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்நிலையில், கோடங்கிப்பட்டியில் உள்ள திருவேங்கடம் வீட்டுக்கு நேற்று காலை 7 மணிக்கு 4 கார்களில் வந்த திருச்சி மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு துணை இயக்குநர் கனகசுப்பிரமணியம் தலைமையிலான 15-க்கும் மேற் பட்ட அதிகாரிகள், அங்கு நிறுத்தியிருந்த தூத்துக்குடி பதிவெண் கொண்ட மினி லாரி மற்றும் வீட்டில் சோதனை நடத்தினர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதில், மினிலாரியில் தக்காளி வைக்கும் பிளாஸ்டிக் பெட்டிகளுக்கு அடியில் சாக்கு மூட்டை களில் பதுக்கி வைக்கப்பட் டிருந்த செம்மரக் கட்டைகள் மற்றும் வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த செம்மரக் கட்டை கள்எனபலகோடிரூபாய் மதிப்பி லா லான 5 டன் செம்மரக் கட்டை களைமினிலாரியுடன்மத்தியவரு வாய் நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இதுதொடர்பாக, வீட்டின் உரிமையாளர் லதாவை கைது செய்து அழைத்து சென்றனர்.

முன்னதாக, கரூர் மாவட்ட வன அலுவலர் சண்முகம் தலைமையிலான குழுவினர் அங்கு வந்து என்ன வகை மரம், அதன் வயது, நீளம், அகலம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து, மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினரிடம் தெரிவித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.