கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட்., திருச்சி மண்டலம் துவாக்குடி கிளையின் மூலம் தேவராயநேரி பகுதி பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்று வர ஏதுவாக கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்து வசதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 19.08.2025 தேவராய நேரியில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், போக்குவரத்துக் கழக அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.