இப்படியும் ஒரு பிழைப்பு இருக்கிறது … கூடவே, இதை நம்பியே வயிறுகளும்தான் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இதுவும் பேச வேண்டிய டாபிக்தான். லாரி தொழில் முன்பு போல் இல்லை. விவசாயத்தை உயிராக, வாழ்வியல் முறையாகக் கையில் எடுத்தவர்கள் எப்படி விவசாயத்தை கைவிட மாட்டார்களோ அப்படித்தான் லாரி தொழிலும்.

சம்பள உயர்வில்லை. வாடகை ஏற்றவில்லை. டீசல் விலை உயர்வு. சரக்கு ஏற்றுவதற்காக நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை. டிரைவர்கள் தட்டுப்பாடு, க்ளினர்கள் கிடைக்காமல் டிரைவர்கள் மட்டுமே ஒற்றை ஆளாய் பயணிக்கும் துயரம். ஒழுங்கற்றச் சாலைகள். கொள்ளையடிக்கும் சுங்கச் சாவடிகள். வழியெங்கும் லஞ்சம் கேட்கும் காவல்துறை மற்றும் அதிகாரிகள். டயர் விலை உயர்வு. டீசல் திருட்டு.  இன்ஸூரன்ஸ் மற்றும் வரிச் செலவுகள். பாதுகாப்பில்லாத டைமிங் டெலிவரி போட்டிகள். காட்டு வழித்தடங்களில் கொள்ளையடிக்கும் திருடர்கள். உயிருக்கு உத்திரவாதம் இல்லாதப் பிழைப்பு என லாரி தொழில் குறித்து இன்னும் கூட பேசிக் கொண்டே போகலாம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இது தான் எங்களுக்கு சோறு போட்ட தொழில் என்று லாபமோ நட்டமோ , டிரைவர் கிடைக்காவிட்டாலும் எத்தனையோ பேர் முதலாளிகளாக இருந்தாலும் தாங்களே இன்னமும் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். முதலாளிகள் என்று சொல்வதால், இவர்கள் பெரும் முதலாளிகள் அல்ல. தவணை முறையில் வண்டி வாங்கி வருகிற சொற்ப பணத்தை மாதாமாதம் கடனாகச் செலுத்திக் கொண்டிருப்பவர்கள். 6 வீல்கள் வண்டிகளுக்கு டிமாண்ட் இல்லையென்று 10 வீல்கள், 12 வீல்கள், 14 வீல்களுக்கு மாறுவது. ஒரு நிறுவனத்தின் காண்ட்ராக்ட் வாங்குவதற்காக, வருடக் கணக்கில் அலைந்தாலும் கடைசியில் கிடைக்காமல் போவது என நட்டத்துக்கான பல காரணிகள் பிற தொழில்களைப் போல் லாரி தொழிலும் உண்டு.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

உயிருக்கு உத்திரவாதமற்ற தொழில் செய்யும் ஓட்டுநர் குடும்பங்களுக்கு எந்தவிதமான அரசு சலுகைகளும் கிடையாது. பிஸ்கட்டில் மயக்க மருந்து கொடுத்து, சாப்பிட வைத்து, கத்தியைக் காட்டி ஜட்டியைத் தவிர எல்லாவற்றையும் உருவிக் கொண்டு செல்லும் கொள்ளையர்கள் மத்தியில் பாதுகாப்பற்ற பயணம் செய்யும் டிரைவர்களுக்கு போதிய வருமானமோ, பாதுகாப்பு மற்றும் மருத்துவ நலத்திட்டங்களோ இல்லை.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

ஒரு ஜோடி டயர் வெடித்துப் போனால், வழியில் நடக்கும் விபத்துகள் குறித்து அவர்களுக்கு அக்கறை இல்லாமல் இல்லை. போதுமான வருமானம் இல்லாமல் செகண்ட் ஹாண்டு டயர்கள் கூட வாங்க வழியில்லாமல் அடுத்த சிங்கிளில் (பயணத்தில்) வாங்கிக்கலாம் என சமாதானம் செய்தபடிதான் ஒரு சிலராவது பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லா தொழில்களைப் போல சரி, தவறுகள் இங்கும் இருக்கலாம். இதில் எதையும் நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அவற்றை சரிசெய்வதற்கான தீர்வுகளை நோக்கிப் பயணிப்பதே நிரந்தர தீர்வாகலாம். ஒரு லாரி டிரைவரின் மகளாக மனதில் தோன்றியது.

— பொன்விமலா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.