ஒரே முகவரியில் இரண்டு பள்ளிகள், குழப்பத்தில் மாணவ, மாணவியர்கள் தவிப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருப்புவனத்தில் ஒரே முகவரியில் இரண்டு தனியார் பள்ளிகள் பெயர் பலகையுடன் செயல்படுவது பள்ளி மாணவ, மாணவியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்புவனத்தில் சிவகங்கை ரோட்டில் செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி என்ற பெயரில் தனியார் பள்ளி 100 மாணவ, மாணவியர்களுடன் செயல்பட்டு வந்தது. திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பலரும் இங்கு கல்வி பயில்கின்றனர்.

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியை பின்தொடர.....

ஒரே முகவரியில் இரண்டு பள்ளிகள்,
ஒரே முகவரியில் இரண்டு பள்ளிகள்,

இந்நிலையில் மேலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகம் செயிண்ட் மேரீஸ் பள்ளியை லீஸ்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து புதிய பள்ளி நிர்வாகம் ஜாஸ் மெட்ரிக் பள்ளி என பெயர் பலகை மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு அடையாள அட்டை வழங்கியதுடன் கூடுதலாக மாணவ ,மாணவியர்களை சேர்த்துள்ளது.

குறைவான முதலீட்டில் நிலையான வருமானம் -

ஜாஸ் மெட்ரிக் பள்ளி என்ற பெயரில் செயல்பட எந்த வித அனுமதியும் பெறாத நிலையில் கடந்த நான்கு மாதங்களாக ஜாஸ் என்ற பெயரிலேயே பள்ளி செயல்பட்டு வருகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஒரே முகவரியில் இரண்டு பள்ளிகள், இதுகுறித்து பெற்றோர்கள், கல்வி துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகளுக்காக மாணவ, மாணவியர்களிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை தனியார் மற்றும் அரசு பள்ளிகள் பெற்று வரும் நிலையில் எந்த வித அங்கீகாரமும் பெறாமல் திருப்புவனத்தில் தனியார் பள்ளி மவுனம் சாதித்து வருகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பொதுத்தேர்வுகளுக்காக அனைத்து பள்ளிகளும் ஆவணங்களை சேர்த்து வருகின்றன. எந்த பள்ளி பெயரில் பொதுத்தேர்வு எழுதப்போகிறோம் என தெரியாமல் தவித்து வருகின்றனர். ஒரு முகவரியில் ஒரு பள்ளிதான் செயல்பட முடியும், ஆனால் இங்கு மட்டும் ஒரு முகவரியில் இரண்டு பள்ளி பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவியர்களிடம் பழைய பள்ளி பெயரில்தான் பொதுத்தேர்வு எழுத முடியும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி பெயர் வேறு , பொதுத்தேர்வு வேறு பள்ளி பெயரிலா என குழப்பத்தில் உள்ளனர்.

 

—  ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.