பழனிசெட்டிபட்டி – பேரூராட்சி நிர்வாக அலட்சியத்தால் பூட்டியே கிடக்கும் இறகு பந்து விளையாட்டரங்கம் !
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் திமுக எம்பி கனிமொழி திறந்து வைக்கப்பட்டதால் கவனிப்பார் இன்றி கல்வெட்டுகளை அப்புறப்படுத்தி நிலையில் இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி, சுகாதார உலகம் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்டவை பொதுமக்கள் பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கும் அவலம்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பழனி செட்டிபட்டி பகுதியில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இறகு பந்து விளையாட்டரங்கம் சுமார் 25 லட்சம் மதிப்பீடு கட்டப்பட்டுள்ளது.
இதே போல் வளாகத்தில் 2015 – 2016 ஆம் உடற்பயிற்சி கூடம் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சுகாதார வளாகம். ஆண்களும், பெண்களும் பயன்படுத்தக்கூடிய தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2016 – 2017 ஆண்டு பெண்கள் சுகாதார வளாகம் சுமார் 8 லட்சம் ரூபாய் கட்டப்படும் திறக்கப்படாமல் உள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் சிறுவர் பூங்காவும் பொதுமக்கள் பயன்பாட்டின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தால் அரசு திட்டங்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டவை கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் முடக்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.