பொங்கலுக்கு வர்றான் ‘மெட்ராஸ்காரன்’
எஸ் . ஆர்.புரொடக்ஸன் பி..ஜெகதீஷ் தயாரிப்பில், ‘ரங்கோலி’ பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா நடிப்பில், ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள ‘மெட்ராஸ்காரன்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இதனையொட்டி படத்தின் டிரெய்லரை ஜனவரி 06- ஆம் தேதி இரவு சென்னை சத்யம் தியேட்டரில் படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்நிகழ்வினில் பேசியவர்கள்….
தயாரிப்பாளர் பி.ஜெகதீஷ்..
“ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்குவது பத்திரிகையாளர்கள் தான். டீசரை வெளியிட்டுத் தந்த எஸ் டி ஆருக்கும், டிரெய்லரை வெளியிட்டுத் தந்த விஜய் சேதுபதி அவர்களுக்கும் நன்றி. இந்தப்படத்தை ஆரம்பித்த போது பொங்கல் மாதிரி பண்டிகையில் வெளியிட வேண்டும் என நினைத்தோம், அது நடந்துள்ளது. காதல், ஆக்சன் என எல்லாம் அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. இந்தப்படத்தோடு பத்து படங்கள் பொங்கலுக்கு வருகிறது. வரட்டும் கண்டிப்பாக மெட்ராஸ்காரன் உங்களுக்குப் பிடிக்கும். என்னுடன் என் டீம் துணை நிற்பார்கள்”.
எடிட்டர் வசந்த்…
“இது என் முதல் படம். இந்த வாய்பைத் தந்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்”
நடிகை ஐஸ்வர்யா தத்தா… “தயாரிப்பாளர் ஜெகதீஷ் மிகச்சிறந்த தயாரிப்பாளர், மிகச் சிறந்த மனிதர். திரைத்துறைக்குத் தேவையான தயாரிப்பாளர். இந்தப் படத்திற்கு, எத்தனை தடைகள் வந்தாலும், சமாளித்து இப்ப பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுகிறார். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் மிக நல்ல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு இப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும்”.
நடிகர் கலையரசன்…
“மெட்ராஸ் தான் என் சொந்த ஊர். எப்போதுமே எனக்கு மெட்ராஸ் பிடிக்கும். மெட்ராஸ்காரன் படத்தில் ஒரு பங்காக நானும் இருப்பது மகிழ்ச்சி. நடிகர் ஷேன் நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். மிகச்சிறந்த படத்தைத் தந்துள்ளீர்கள், ஒரு படத்தைத் தயாரிப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது மிகவும் கஷ்டம். இன்றைய நிலைமையில், தியேட்டர் ஓடிடி என பிசினஸ் பார்ப்பது, திரையரங்குக்குத் திரைப்படத்தைக் கொண்டு வருவது, மிகப் பெரிய படங்களுக்கே சிக்கலாக உள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் டிரெய்லருக்கு ஒரு விழா, டீசருக்கு ஒரு விழா, என மிக சிறப்பாக விளம்பரப்படுத்தி வரும் தயாரிப்பாளருக்கு நன்றிகள்.
என்னிடம் சிலர் என்ன தயாரிப்பாளர் நிறையப் பணம் வைத்திருக்கிறாரா? என்று கேட்டனர். இல்லை நல்ல மனது வைத்திருக்கிறார் என்று சொன்னேன். என்னுடன் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோருமே மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கண்டிப்பாக மெட்ராஸ்காரன் உங்களை மகிழ்விப்பான். ஒரு பண்டிகையின் போது, முன்பெல்லாம் பல திரைப்படங்கள் வெளியாகும் நிலை இருந்தது, அந்த நிலை மீண்டும் வரவேண்டும்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இயக்குநர் வாலி மோகன் தாஸ்
“தயாரிப்பாளர் ஜெகதீஷ், இப்படத்தை டீசரில் ஆரம்பித்து, சிங்கிள், டிரெய்லர் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விழா எடுத்து, இப்படத்தை மிகச் சிறப்பாக எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக என்னுடன் உழைத்த அனைத்து நடிகர்- நடிகைகள், படக்குழுவினருக்கு நன்றி. கண்டிப்பாக இந்த படம் உங்களை மகிழ்விக்கும்”
நடிகர் ஷேன் நிகம்…
“நான் ரொம்ப லக்கி மேன் .மலையாளத்தில் கூட எனக்கு இப்படிச் சிறப்பான அறிமுகம் கிடைக்கவில்லை. தமிழில் ஒரு மிகச் சிறப்பான திரைப்படம் கிடைத்திருக்கிறது. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கும் என்னை இந்த கதாபாத்திரத்திற்கு யோசித்த இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கும் நன்றி. என்னுடன் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.
நடிகர் கலையரசன் மிக இயல்பானவர். பார்த்தவுடன் மச்சான் என அழைத்து, மிக இயல்பாகப் பழகுவார். அவ்வளவு எளிமையானவர். இப்படத்தில் அனைத்து கலைஞர்களும் மிகச் சிறப்பான உழைப்பைத் தந்து இருக்கிறார்கள். இந்தப் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி”.
மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் இசை சாம் சி எஸ். பி.ஆர்.ஓ. சதீஷ் ( எய்ம்)
— மதுரை மாறன்.