டங்ஸ்டன் விவகாரத்தில் வேடிக்கை பார்த்த தமிழக அரசு ஜீகே வாசன் பேட்டி !
டங்ஸ்டன் விவகாரத்தில் டெண்டர் போடும்பொழுது தமிழக அரசு வேடிக்கை பார்த்துவிட்டு கடைசி நேரத்தில் அதை எதிர்த்தது ஒரு புதிராக இருக்கிறது என தாமக தலைவர் ஜீகேவாசன் பேட்டி.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட பகுதிகளை சேர்ந்த மூத்த மற்றும் அனைத்து அடிப்படை உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு, மதுரை காமராஜர் சாலையில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்றது. தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் முழு பூசணிக்காயை யாரும் மறைக்க முடியாது. உண்மை நிலை வெளிவர வேண்டும் இதுதான் சாதாரண மக்களின் எதிர்பார்ப்பு. சார்…! மோர்…! தயிர்…! வடையெல்லாம் யாரிடமிருந்து கக்க வைக்க வேண்டுமோ காவல்துறை அவர்களிடமிருந்து கக்க வைக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் பெற்றோர்கள் அரசின் மீது நம்பிக்கை ஏற்படும்.
நேற்று அண்ணா பல்கலை கழக விவகாரம் குறித்து பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையில் பேரணி நடைபெற்றது. பேரணி செல்ல விடாமல் அவர்களை காவல்துறையினர் கைது செய்த பாஜக பெண் நிர்வாகிகளை ஆட்டு கொட்டகையில் அடைத்து வைத்தார்கள்.
காவல்துறை எதிர்க்கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிப்பது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல, தமிழகத்தில் சமீப காலத்தில் மகளிர் நடத்தும் போராட்டங்களில் தமிழகத்தில் மகளிர்களின் மதிப்பை குறைக்கும் வகையில் காவல்துறை மூலம் அரசு நடந்து கொள்கிறது. பாமகவை சேர்ந்த சௌமியா அன்புமணி மற்றும் பாஜக பெண் நிர்வாகிகள் போராட்டம் நடத்துவதற்கு முன்பே கைது செய்யப்படுவது அடக்கு முறையை கையாளுவது போன்று உள்ளது.
அண்ணா பல்கலை கழக விவகாரத்தில் தமிழக அரசும் காவல்துறையும் உண்மை நிலையை மூடி மறைக்க நினைத்தால் மக்களுக்கு செய்யக்கூடிய அநீதி. ஜனநாயக முறையை கடைப்பிடித்து நியாயம் கேட்டு அமைதியாக போராடும் நபர்களுக்கு அனுமதி கொடுப்பது அரசின் கடமை.!
திமுக அரசின் கூட்டணி கட்சியில் உள்ள அகில இந்திய கூட்டணி கட்சியின் தலைவர் திமுக அரசினுடைய அடக்கு முறையும், தவறுகளை நேரடியாக முதல்வரிடம் சுட்டிக்காட்டி இருப்பது ஆட்சியின் தவறான போக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இடைத்தேர்தல் என்றால் ஓட்டுக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வாக்கு வங்கிக்கு செலவு செய்யும் அரசு பொங்கல் தொகுப்பிற்கும், சமீபத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 ரூபாய் ஆவது கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் பகுதிகளில் தொடர் வெடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற வெடி விபத்து நடைபெறாத வண்ணம் ஆட்சியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலி-சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளுடன் செல்கிறது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் அமைத்து இயக்கப்பட வேண்டும் என தாமக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் மாடுபடி வீரர்களுக்கு 10 லட்சம் வழங்க வேண்டும் என மாடுபிடி வீரர்கள் கோரிக்கை வைக்கிறார்கள் அதை நான் முற்றிலும் மறுக்கிறேன். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கும் நபர்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கும் அரசு போட்டியில் பங்கு பெற்று உயிர் இழக்கும் மாடுபிடி வீரர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வழங்குவதே நியாயமாக இருக்கும் என தெரிவித்தார்.
மதுரையில் பல சாலைகள் சிதளம் அடைந்து மேடு பள்ளங்களாக உள்ளது உடனடியாக அதனை சரி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
தாமாக சார்பில் நாளை ஈரோட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தினால் பொதுமக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
பாலியல் பிரச்சனைகள் எல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனி மனித ஒழுக்கம் தவறி கண்மூடித்தனமாக மிருகத்தனமாக நடைபெறுகிறது இதுபோன்ற சம்பவத்தைப் பொறுத்தவரை முதல் குற்றவாளிகள் இவன்தான் என எஃப் ஐ ஆர் இ தெரிய வந்தால் 24 மணி நேரத்தில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் அப்போதுதான் இது போன்ற மிருகத்தனமான குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்படும் அந்த அச்சம் இப்போது அரசிடமும் காவல்துறை மீதும் குற்றவாளிகளுக்கு பயம் இல்லை. பொதுவாக இது போன்ற உதாரணங்கள் தமிழகத்தின் ஆட்சியாளர்களிடம் பட்டியல் போடலாம் பொறுப்புள்ளவர்கள் பொறுப்புக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
டங்ஷன் விவகாரத்தில் மக்களுக்கு பாதகமாக இருந்தால் அதை செயல்படுத்தக் கூடாது என்பதில் அதிமுகவும், தாமக ஒத்த கருத்தோடு தான் இருந்தோம். அதே நேரத்தில் தமிழக அரசு உரிமைகளை கொடுக்க வேண்டும் உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும் அதை தாண்டி எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது என தெரிவித்தோம். ஆனால், துரதிஷ்டவசமாக டெண்டர் போடும்பொழுது தமிழக அரசு வேடிக்கை பார்த்துவிட்டு கடைசி நேரத்தில் அதை எதிர்த்தது ஒரு புதிராக இருக்கிறது என கூறினார்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.