கருவறையின் பூட்டை உடைத்து அம்மன் தாலியை திருடிச் சென்ற இளம் ஜோடி!

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

கருவறையின் பூட்டை உடைத்து
அம்மன் தாலியை
திருடிச் சென்ற இளம் ஜோடி!

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியில் காரில் வந்திறங்கிய அடையாளம் தெரியாத ஒரு இளம் ஜோடி கோவில் கருவறை பூட்டை உடைத்து நுழைந்து அம்மன் கழுத்தில் இருந்த இரண்டே கால் பவுன் எடையுள்ள தாலிச் செயினைத் திருடிச் சென்றுள்ளது.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

இச் சம்பவம் அப் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கபிஸ்தலம் உச்சிமாகாளியம்மன் கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டே கால் பவுன் எடையுள்ள தாலிச் செயின் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

செம்ம சூப்பரான திரைப்படம்..

4

இதுபற்றி தகவலறிந்த கபிஸ்தலம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்னதர்.

கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, காரில் வந்திறங்கிய அடையாளம் தெரியாத ஒரு இளம் ஜோடி கருவறை பூட்டை உடைத்து நுழைந்து சாமி கும்பிடுவதுபோல நடித்து அம்மன் கழுத்திலிருந்த தாலிச் செயினை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.

அந்த இளைஞர் வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார். அந்த இளம் பெண் இளஞ் சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தார்.

இச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இத் துணிகரச் செயலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத அந்த இளம் ஜோடியை தேடி வருகின்றனர்.

5
Leave A Reply

Your email address will not be published.