செப்பர்டு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு !
செயின்ட ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை அளுந்தூர் ஊராட்சியில் உள்ள புனித பேட்ரிக் மேல்நிலை பள்ளியில் உள்ள மாணவியர்களுக்கு நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் அருட்சகோ ஜான் ஸ்டூவர்ட் மில் அவர்கள் தலைமை வகித்தார். விரிவாக்கத்துறை செப்பர்டு இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் செல்வராஜ் மற்றும் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்து ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் வணிகவியல் துறையின் பேராசிரியர் முனைவர் ஜார்ஜியா தொடக்கவுரையாற்றினார்.


இதையடுத்து திருச்சி மறை மாவட்ட குடும்ப நல ஆலோசகர் திருமதி ஜோஸ்பின் ஹில்டா சுத்தம் சுகாதாரம் பற்றியும் மாணவிகளுக்கு ஏற்படும் உடல் மன ரீதியான பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். மாணவிகளின் கேள்விகளுக்கும் அவர் விடையளித்தார்.
செல்வன் தனுஷ் வந்தவர்களை வரவேற்றார் முடிவில் ஜெனிபர் ரோஸ் நன்றி கூறினார் மூன்றாம் ஆண்டு இளங்கலை பொருளியல் மாணாக்கர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 187 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது என்றும் மேலும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த செப்பர்டுக்கும் பொருளியல் மாணவர்களுக்கும் அவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்தார்கள்
