இடிந்த மேற்கூரை… சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்! வைரலாகும் வீடியோ!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கீழ வடகரை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரம் பகுதியில் 15 வருடங்களுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த மேல்நிலைத் தொட்டியின் மேற்கூரை இடிந்து குடிநீர் தேக்கி வைக்கும் பகுதிக்குள் விழுந்துள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மேலும் மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிக்கப்படாமல் தொட்டியின் உட்பகுதியில் செடி கொடிகள் வளர்ந்து சுகாதாரமற்ற முறையில் இருக்கும் நிலையில் குடிநீர் தொட்டியில் தற்பொழுது வரை நீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

குடிநீர் மேல்நிலைத் தொட்டியின் மேற்கூரை இடிந்து விழுந்து சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகம் செய்வது குறித்த வீடியோவை இளைஞர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இப்பிரச்சனை குறித்து பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சி செயலர் லெனின் இடம் கேட்டபோது ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக குடிநீர் விநியோகத்தை நிறுத்தி புதிய மேல்நிலைத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

—   ஜெய்ஸ்ரீராம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.