சேலம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ஊறல்கள் கண்டுபிடிப்பு…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சேலம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ஊறல்கள் கண்டுபிடிப்பு…

700 லிட்டர் சாராய ஊரல்களை கீழே கொட்டி அளித்த காவல்துறையினர் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்….

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து 22 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனை அடுத்து தமிழகம் முழுவதும் கள்ள சாராய தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் கல்வராயன் மலைப்பகுதி மற்றும் சேர்வராயன் மலைப்பகுதியில் கள்ள சாராயம் தடுப்பதற்கு தனிப்படையில் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

angusam.com – 1

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

அதன் ஒரு பகுதியாக இன்று 17.05.2023 சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி கருமந்துறை காவல் எல்லைக்குட்பட்ட
குண்டிகாடு அருகில் உள்ள ஓடையில் சாராயம் காய்ச்ச ஊறல்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக துணை காவல் கண்காணிப்பாளர் ஹரி சங்கரி தலைமையிலான காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் வனப்பகுதியில் உள்ள ஓடையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது இரண்டு பேர்களில் கள்ள சாராயம் காய்ச்சுவதற்காக ஊரல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து 500 லிட்டர் சாராய ஊரல்களை கீழே கொட்டி அழித்தனர் தொடர்ந்து சாராய ஊரல் அமைத்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதே போல கல்வராயன் மலைப்பகுதி கருமந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணூர் மலைப்பகுதியில் உள்ள ஓடையில் சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் சாராய ஊரல்கள் கண்டுபிடித்தனர்.

இதனை எடுத்து அந்த ஊரல் கீழே கொட்டி அழித்ததுடன் அடுப்பு மற்றும் ஊரல்கள் அமைக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களை உடைத்து எறிந்தனர்.

தொடர்ந்து மலைப்பகுதியில் உள்ள இடங்களில் சோதனை மேற்கொண்ட காவலர்கள் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் குறித்த தகவல் தெரிந்தாலோ அல்லது விற்பது தெரிய வந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

-சோழன்தேவ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.