யாவரும் கேளீர் – இனி காலாண்டிதழாக !
பேராசிரியர்களுக்கும் நண்பர்களுக்கும் வணக்கம்.
யாவரும் கேளீர் தற்காலிகமாக காலாண்டிதழாக மாற்றப்பட்டுள்ளது. ஆண்டில் மார்ச்சு, ஜூலை, செப்டம்பர், டிசம்பர் திங்கள்களில் வெளிவரும். அடுத்த இதழ் செப்டம்பர் திங்களில் வெளிவருகின்றது. உலகப் பெருந்தமிழன் – திராவிட மொழியியல் அறிஞர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியம் – நூற்றாண்டு விழா – சிறப்பிதழாக வெளிவருகின்றது. பேராசிரியர்களும், நண்பர்களும் ஆய்வாளர்களும் இதழுக்குத் தொடர்ந்து கட்டுரை வழங்கிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதழின் பக்கங்கள் 96 – 128 வரை உயர்த்தப்பட உள்ளன. நண்பர்கள் அனைவரும் ஆண்டு சந்தா செலுத்தி யாவரும் கேளீர் இலக்கியப் பயணத்தில் இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் தாங்கள் விரும்பும் தலைப்பில் கல்வி தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம். சமகால அரசியல், பொருளாதாரம் மற்றும் திரைத்துறை சார்ந்த மதிப்புரைகளையும் கட்டுரையாக ஆக்கம் செய்து அனுப்பலாம். நூல் அறிமுகம் மற்றும் மதிப்புரைக்கு இரு நூல்களை அனுப்பி வைக்கலாம்.
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி சார்ந்த தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து மற்றும் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கி.சதீஷ்குமரன் – இவர்கள் முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். “புதியதோர் உலகம் செய்வோம் – வாசிப்பே நம் சுவாசிப்பு. பேசா பொருளைப் பேசுவோம்”
– முனைவர் தி.நெடுஞ்செழியன் / ஆசிரியர் / யாவரும் கேளீர்.
வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா – சிறப்பிதழ் !
திராவிட மொழியியல் அறிஞர தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர், வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா – சிறப்பிதழ் !
வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் பல்வேறு ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. சிறப்பிதழ் ஆசிரியர் – தஞ்சாவூர் கவிராயர்.
கட்டுரைகள் ஏ4 அளவில் இரண்டு பக்கங்களில், தமிழ் யூனிகோடு எழுத்துருவில் இருக்க வேண்டும். கட்டுரையை Ms Word கோப்பில் (9443214142) என்ற புலன எண்ணிற்கு அனுப்ப வேண்டும். கடைசி தேதி : 31.08.2026.







Comments are closed, but trackbacks and pingbacks are open.