அப்பாவிடமே சீட்டிங் போட்ட டைரக்டர் – இது சினிமா அல்ல நிஜம் !
3 நாட்கள் முன்பு வரை அவருக்கு இந்த விசயம் தெரியாது. அவர் வேறு யாரோ தயாரிப்பாளர் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தார். இப்போது தான் சொன்னேன். அவர் என்னை நம்பவே இல்லை.
அப்பாவிடமே சீட்டிங் போட்ட டைரக்டர் – இது சினிமா அல்ல நிஜம் !
Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கிறது’வல்லவன் வகுத்ததடா’. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஏப்ரல் 05-ஆம் தேதி சென்னையில் நடந்தது.
இந்நிகழ்வில் பேசியவர்கள்…
இயக்குநர் விநாயக் துரை , “எங்களின் 2இரண்டு வருட போராட்டம் தான் இந்தப்படம். இந்தப்படத்தின் மீது வெளிச்சம் விழக்காரணம் தனஞ்செயன் சார் தான் அவருக்கு நன்றி. எங்களை வெகுவாக பாராட்டி அவர் பேனரையும் தந்துள்ளார். இது ஹைபர் லிங் கதைக்களம். இதைஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி எல்லாம் ஓகே ஆகியிருந்த நிலையில், அவர் எனக்கு செக் சைன் பண்ணும்போது பாம்பு வந்தது. அந்த தயாரிப்பாளர் அப்படியே போய் விட்டார். என் அப்பாவிடம் போய் என் ஃபிரண்டோடு பிஸினஸ் செய்யப்போகிறேன் என சொல்லி அவரிடம் காசு வாங்கித் தான் இந்தப்படம் எடுத்தேன். 3 நாட்கள் முன்பு வரை அவருக்கு இந்த விசயம் தெரியாது. அவர் வேறு யாரோ தயாரிப்பாளர் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தார். இப்போது தான் சொன்னேன். அவர் என்னை நம்பவே இல்லை. இன்று இந்த பிரஸ் மீட்டைக் காட்டி அவரை நம்பவைப்பேன். தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் வல்லவன் வகுத்ததடா படத்தின் மையம். பணம் 5 பேர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது தான் படம்.படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி”.
ஹீரோயின் ஸ்வாதி…
“ஆக்டிங் ஸ்கூல் படிக்கும்போதே நடிக்கும் ஆர்வம் இருந்தது ஆனால் அது முடியவில்லை. ஆனால் நடிப்பின் மீதான ஆர்வத்தில் சின்னச் சின்ன போட்டோஷூட், மாடலிங் எல்லாம் செய்தேன். ஆனால் முதல் பட வாய்ப்பே, மெயின் லீடாக கிடைக்கும் என நினைக்கவில்லை. கார்த்திக் சாருக்கு( டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் விநாயக்கின் நிஜப் பெயர்)நன்றி. இந்தப்படத்தில், இந்த டீமிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். எல்லோரும் கடினமாக உழைத்துத் தான் இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். எல்லோருக்கும் இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். ஆதரவு தாருங்கள்”.
தயாரிப்பாளர் CV குமார் …
படத்தின் 8 நிமிட கட் அட்டகாசமாக இருந்தது. எனக்கு இந்த மாதிரி இண்டிபெண்டண்ட் படங்கள் ரொம்பப் பிடிக்கும். பெரிய பெரிய ஜாம்பவான்கள் அப்படி வந்தவர்கள் தான். ஆனால் அதை எப்படி பிரசண்ட் செய்கிறோம் என்பது தான் முக்கியம். இப்பபடத்தின் பிரசண்ட் எல்லாம் நன்றாக உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் …
எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இப்படத்திற்குச் செய்து வருகிறோம். உங்கள் கடமையாக நினைத்து இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
ஐந்து கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை, பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர்லிங் திரைக்கதையில் சொல்லும், க்ரைம் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப குழு : ஒளிப்பதிவு : கார்த்திக் நல்லமுத்து; இசை: சகிஷ்னா சேவியர்; எடிட்டர்: அஜய்; சண்டைக்காட்சி: மகேஷ் மேத்யூ; மக்கள் தொடர்பு : சதீஷ்-சிவா (AIM).
மதுரை மாறன்