ஆரோக்கியமாக … ஆனந்தமாக …!

வாழ்க்கை வாழ்வதற்கே பாகம் – 20

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

யாரு இந்த உலகத்துல சந்தோசமான மனுஷன்? யாருங்க கோடீஸ்வரன்? யாரு அதானி குடும்பமா? ரிலையன்ஸ் குடும்பமா? இல்லை டாட்டா பிர்லா குடும்பமா? இதெல்லாம் கிடையவே, கிடையாது. யாரு ஒருத்தன் ஆரோக்கியமாக இருக்கிறானோ, ஆஸ்பத்திரிக்கு போகாம இருக்கிறானோ அவன் தாங்க அந்த மனுஷன். அவன் தாங்க அந்த கோடீஸ்வரன்.

1980 – 2000 வருஷத்துல ஒருத்தர் பார்க்கும் போது நீங்க எப்படி இருக்கீங்க ? நல்லா இருக்கீங்களா? வீட்டுல கல்யாணமா? காரியமா? என்று கேட்பான். ஆனால், அதுவே இப்போது உங்க சுகர் எப்படி இருக்கு? உங்க தைராய்டு எப்படி இருக்கு? உங்க பிபி எப்படி இருக்கு? அப்படின்னு கேக்குறாங்க. அப்படின்னா இன்னைக்கு மனுஷன் வாழ்க்கை, மனுஷனுடைய வாழ்வாதாரம், மனுஷனுடைய அணுகுமுறை எல்லாமே மாறிடுச்சுங்க. ஆரோக்கியமாக, இருப்பதற்கு தாங்க. ஆனந்தம் இருக்கிறதுக்காக தாங்க.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

முன்பெல்லாம் 80 வயசு 90 வயசுன்னு எல்லாரும் உயிரோட வாழ்ந்தாங்க. இப்ப அந்த நிலைமை தலைகீழா மாறிடுச்சு. இளம் வயதிலேயே மாரடைப்பு, பள்ளி மாணவனுக்கு ஹைசுகர் என்பதெல்லாம் கற்பணையிலும் நினைத்து பார்க்க முடியாத விவகாரங்களாகிவிட்டது. உடலையும் உள்ளத்தையும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆனந்தமாய் வைத்துக்கொள்ள முயற்சிப்போம். ஆரோக்கியமான சுகாதாரத்தையும் ஆரோக்கியமான குடும்பத்தையும் உண்டாக்குவோம்.

—   பேரா.சா.அருள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.