அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கலெக்டர் அலுவலகத்தில் வாகனங்கள் ஜப்தி ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை மாவட்டம் உத்தங்குடி நீதிமன்றம் அருகேயுள்ள அருள்மிகு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார்டிரஸ்ட் சார்பில் இரண்டரை ஏக்கர் நிலமானது கடந்த 2004 நெடுஞசாலைத்துறையினரால்ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இந்த நிலத்திற்கு 2022ஆம் ஆண்டு வரையிலான இழப்பீட்டு தொகையாக 2கோடியே 42 லட்சத்தி 69ஆயிரம் ரூபாயை அரசு தரப்பில் வழங்கப்படாத நிலையில் மனுதாரர் லெட்சுமண செட்டியார் தரப்பில் மதுரை மாவட்ட  5ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கார் உள்ளிட்ட 13 கார்கள், 100 கணிணிகள், 20 லேப்டாப் 200 பீரோக்கள் 200 நாற்காலி ஜெராக்ஸ் பிரிண்டர் ஏசி உள்ளிட்டவைகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்நிலையில் மூன்றரை கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மனுதாரர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்டோரின் வாகனங்களை ஜப்தி செய்தனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட அசையா பொருட்களை ஜப்தி செய்ய உள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளின் கார்கள் மற்றும் கணினி ஆகிய பொருட்களை ஜப்தி செய்ய உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.