அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘வெஞ்சென்ஸ்’ 

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : ஏ.பி.அசோக்குமார், டைரக்டர் : ராகுல் அசோக், ஆர்ட்டிஸ்ட் : அபர்ணதி, இளவரசு, ஜான்விஜய், ஒய்.ஜி.மகேந்திரன், காளிவெங்கட், லிவிங்ஸ்டன், ஷரவண சுப்பையா, டி.எம்.கார்த்திக் ஸ்ரீனிவாசன், சச்சு, சுரேஷ் சக்கரவர்த்தி, சாய் தன்யா, ரேகா நாயர், சம்யுக்தா,  ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, இசை: கார்த்திக் ராஜா, பின்னணி இசை : அருண்ராஜ்,எடிட்டிங் : எஸ்.இம்ரான், ஸ்டண்ட் : டேஞ்சர் மணி, பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.

தன்னைப் பற்றி எப்போதுமே எல்லோரும் புகழ்ந்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற புகழ் போதைக்கு அடிமையானவள் வேணி. எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றும் மூன்று நாட்களுக்குத் தான் புகழ்கிறார்களே என்ற வெறியில் வளர்ப்பு அப்பா காளிவெங்கட்டை குளோஸ் பண்ணி, அவரது உடலை தானம் செய்து புகழ் போதையேற்றுகிறாள். அதன் பிறகு அனாதை இல்லத்தில் சேர்ந்து படித்து கலெக்டராகிறாள்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

வெஞ்சென்ஸ்நன்றாகப் படிக்கும் வசதி இல்லாத ஏழை மாணவிகளை படிக்க வைப்பதாகச் சொல்லி புகழ் போதை ஏற்றுகிறாள். ஆட்சி நிர்வாகத்தில் தடாலடியாக ஆக்‌ஷன் எடுத்து போதை ஏற்றுகிறாள். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வையே அரெஸ்ட் பண்ணுகிறாள், முதல்வர் இளவரசுவுடன் மோதுகிறாள். திட்டமிட்டே மதக் கலவரத்தை ஏற்படுத்துகிறாள். டெல்லி ஆட்சியாளருடன் நட்பாகிறாள். வேணி நல்லவளா? கெட்டவளா? அவளிடம் இருக்கும் வெஞ்சென்ஸ் குணம் எப்படி வந்தது? இதான் இந்த ‘வெஞ்சென்ஸ்’-ன் க்ளைமாக்ஸ் அதிரடி ட்விஸ்ட்.

வேணியாக அபர்ணதி. ஒன் வுமன் ஷோ காட்டி பின்னிப் பெடலெடுத்துவிட்டார். மனசுக்குள் வன்மைத்தை வைத்துக் கொண்டே கலெக்டராக அவர் காட்டும் கம்பீரம், ஊழலில் பெர்செண்டேஜ் டீல் பேசும் திமிர்,  குடிகார டிரைவரை கன்னத்தில் பளாரென அறைந்துவிட்டு, பின்பு அவனை வைத்தே மதக்கலவரத்தை ஏற்படுத்துவது, தன்னுடன் பள்ளியில் படித்தவனுக்கு பார் லைசென்ஸ் கொடுத்துவிட்டு, பின்பு அவனையே தூக்கி உள்ளே வைப்பது, அரசுப்பள்ளிகளின் மீது அக்கறை செலுத்துவது என பல முகங்களில் அசத்திவிட்டார் அபர்ணதி. அவரின் கள்ளக் குழந்தை தான் அபர்ணதியின் கம்பீர கேரக்டரை குளோஸ் பண்ணிவிட்டது.

முதல்வர் பிறந்தநாள்

வெஞ்சென்ஸ்முதல்வராக இளவரசு செம மிரட்டல்.  கலெக்டர் வேணியை அலட்சியமா டீல் பண்ணுவது, ஒருகட்டத்தில் டெல்லி மேலிடமே இளவரசுக்கு ஆலோசனை வழங்க அபர்ணதியை அனுப்பியது தெரிந்ததும் அடங்கி, சலிப்பாக பேசுவது என சகலஏரியாவிலும் ரவுண்ட் கட்டி அடிக்கிறார் இளவரசு. எதிர்க்கட்சித் தலைவராக லிவிங்ஸ்டனும் சும்மா சொல்லக்கூடாது. டெல்லி ஆளான மாதவ்வின்[ ஜான் விஜய்] சொல்லுக்கு கட்டுப்பட்டு ஆடும் பொம்மையாக இப்போது அதிமுக கூடாரத்தில் நடப்பதை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சமீபத்தில் நடித்த மத்த படங்களைவிட இதில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் ஜான் விஜய். “நான் சொன்னத செய்” என தெனாவெட்டாக லிவிங்ஸ்டனிடம் பேசுவது அச்சு அசல் நம்ம டெல்லி ஷா போல ஷோ காட்டுகிறார். டெல்லியில் ஆளுபவராக வரும் பெண்மணியும் நிம்மி போலத்தான் இருக்கார்.

முதல்வராக இளவரசுவைக் காட்டியிருந்தாலும் டோட்டலாக அதிமுகவைத் தான் வெளுத்துக் கட்டியிருக்கிறார் டைரக்டர் ராகுல் அசோக். விஜய்யையும் சரமாரியாக போட்டுப் பொளந்திருக்கார்ன்னா பார்த்துக்கங்களேன். ராகுல் அசோக்கின் புத்திசாலித்தனம் என்னன்னா… தமிழ்நாடுன்னு காட்னாத்தானேய்யா வம்பு பண்ணுவீகன்னு ப்ளான் பண்ணி தாய்நாடுன்னு சொல்லி கதகளி ஆடிருக்காரு.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும் அருண்ராஜின் பேக்ரவுண்ட் ஸ்கோரும் வெஞ்சென்ஸுக்கு வெகு சப்போர்ட்டாக இருக்கு.

‘வெஞ்சென்ஸ்-2’வுக்கு வெயிட்டிங்.

அங்குசம் பார்வையில் ‘வெஞ்சென்ஸ்’   44/100

—  ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.