கோர்ட் படியேறிய வெற்றிமாறன்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சென்சாரில் சிக்கிய மனுஷி—பேர்ட் கேர்ள்’ பேர்ட் கண்டிஷனில் வெற்றிமாறன்’  என்ற தலைப்பில் ஏப்ரல்16-30 தேதியிட்ட நமது இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் கோபி நைனார் டைரக்‌ஷனில் ஆண்ட்ரியா நடித்த ‘மனுஷி’ படத்தின் முக்கால்வாசி சீன்களை சென்னை சென்சார் போர்டு வெட்டியெறிந்ததையும் மும்பையில் இருக்கும் ரிவைசிங் கமிட்டிக்குப் போயும் பலனில்லாததால், படத்தை தயாரித்த வெற்றிமாறன், முழுப்படத்தையும்  ரீஷூட் செய்ய வேண்டிய பேர்ட் கண்டிஷனில் உள்ளார் என்பதையும் எழுதியிருந்தோம்.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

Sri Kumaran Mini HAll Trichy

அப்படி  ரீஷூட் செய்து, மீண்டும் சென்சாரில் சிக்கிச் சீரழிவதைவிட சென்னை உயர்நீதிமன்றப் படியேறுவதே மேல் என்ற முடிவுடன் கடந்த வாரம் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ”2024 ஏப்ரலில் ‘மனுஷி’ ட்ரெய்லரை நடிகர் விஜய்சேதுபதி ரிலீஸ் பண்ணினார். அதற்கடுத்த மாதமே படத்தை சென்சாருக்கு அனுப்பியும் 2024 செப்டம்பர் மாதம் படத்தைப் பார்த்து முக்கால்வாசி சீன்களை வெட்டியெறிந்துவிட்டது சென்சார் போர்ட். படத்தை ரீஷூட் செய்தால் ஏகப்பட்ட பணச்செலவாகும். எனவே நீதிமன்றம் இதில் தலையிட்டு படம் ரிலீசாக உதவ வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் வெற்றிமாறன்.

Flats in Trichy for Sale

மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், தகுந்த விளக்கமும் பதிலும் அளிக்குமாறு சென்னை சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நீதிமன்றத்தில் நிச்சயம் நியாம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் வெற்றிமாறன்.

 

—    மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.