5 கோடி ‘லபக்’ செய்த விமல்
5 கோடி ‘லபக்’ செய்த விமல்
நடிகர் விமல் தான் நடித்து, பாதியில் நிற்கும் ‘மன்னர் வகையறா’ படத்திற்காக சென்னை பெர வள்ளூரைச் சேர்ந்த கோபி என்பவரிடம் 5 கோடி கடன் வாங்கினார்.
வாங்கிய கடனுக்கு, தான் தயாரிக்கும் ‘களவாணி-2’ படத்தின் தமிழக ரைட்சைக் கொடுப்பதாகவும் சொன்னார் விமல். ஆனால் அந்தப் படத்தைத் தயாரித்தது டைரக்டர் சற்குணம், பெருமளவில் ஃபைனான்ஸ் பண்ணியவர் அந்தப் படத்தின் வில்லனாக நடித்த தஞ்சையைச் சேர்ந்த ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்.
இதனால் அதிர்ச்சியான கோபி, 5 கோடியைக் கேட்டு விமலுக்கு நெருக்கடி கொடுத்தும் பலனில்லாததால், சென்னை கமிஷனிடம் விமல் மீது புகார் கொடுத்தார். கோபி புகார் கொடுத்த மறுநாளே கமிஷனர் அலுவலகம் சென்ற விமல், எனது எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் தான் என்ற புகாரைத் தட்டிவிட்டார்.
இதனால் கடுப்பான சிங்கார வடிவேலன், மறுநாளே கமிஷனர் அலுவலகம் சென்று, “தன் மீது நடந்து வரும் செக் மோசடி வழக்கை திசை திருப்பவும் கோபிக்குத் தரவேண்டிய பணத்தை அமுக்கும் விதமாகவும் என் மீது பழி போடுகிறார் விமல். எனவே சீட்டிங் பேர்வழியான விமல் மீது ஆக்சன் எடுங்க ப்ளீஸ்” என கம்ப்ளெய்ண்டைக் கொடுத்தார் சிங்காரவேலன்.
இதுகுறித்து சிங்காரவேலனிடம் நாம் பேசிய போது, “கொலைகாரனோ, திருடனோ, தான் செய்த குற்றத்தை என்னைக்காவது ஒத்துக் கொண்டி ருக்கானா? அது மாதிரி தான் விமலும். இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒண்ணு ல்ல” என்றார்.